“சூடா ஒரு Tea கொடுப்பா”.. முதலமைச்சர் பாணியில் களமிறங்கிய உதயநிதி..! பொதுமக்களிடையே சகஜமாக பேசி வாக்குசேகரிப்பு!!
Author: Babu Lakshmanan10 February 2022, 7:15 pm
கரூர் பிரச்சாரத்தின் போது தனது தந்தை ஸ்டாலினைப் போலவே, திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் டீக்கடையில் அமர்ந்து டீக்குடித்த சம்பவம் திமுகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திமுக இளைஞர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில், புகளூர் நகராட்சிக்குட்பட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பேக்கரி கடையில் ஒன்றில் அவரே சென்று அந்த கடை ஒன்றில் தேநீர் அருந்தினார்.
அப்போது அருகில் உள்ள பாட்டி மற்றும் சக டீக்குடிப்பவர்களையும் விசாரித்தார். எப்போதுமே, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆங்காங்கே பிரச்சாரமோ, அல்லது நிகழ்ச்சிக்கு செல்லும் போது, ஆங்காங்கே டீ கடைக்கு சென்று, “சூடா ஒரு டீ கொடுப்பா” என்று தான் கூறி வாங்கி அருந்துவார். ஆனால், அவரது பாணியில் அப்படியே மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் களமிறங்கியுள்ளது இப்பகுதி மக்களிடையே பெரும் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.