திமுக எம்பி ஜெகத்ரட்சகனை தொடர்ந்து ஆ.ராசாவுக்கு சிக்கல் ; 15 அசையா சொத்துக்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி!!

Author: Babu Lakshmanan
10 October 2023, 4:41 pm

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திமுக எம்பியுமான ஆ.ராசா மீது ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது தொடர்பான நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், திமுக எம்பி ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.

இது குறித்து அமலாக்கத்துறை தனது X தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 2002 விதிகளின்படி, முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறை 5 நாட்கள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1000 கோடி அளவுக்கு எம்பி ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பு செய்ததாக சொல்லப்படுகிறது. தற்போது, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மற்றொரு திமுக எம்பி ஆ.ராசாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vijay Cameo in Kanchana 4 காஞ்சனா 4ல் தளபதி விஜய்? சஸ்பென்ஸ் வைக்கும் லாரன்ஸ்!!
  • Views: - 422

    0

    0