சோதனைக்கு மேல் சோதனை… திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 இடங்களுக்கு சீல்… அமலாக்கத்துறையின் அடுத்த அதிரடி

Author: Babu Lakshmanan
12 October 2023, 8:08 pm

திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 இடங்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திமுக எம்பியுமான ஆ.ராசா மீது ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், திமுக எம்பி ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இந்தச் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஆ.ராசாவின் 15 சொத்துகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கோவை, சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 15 இடங்களுக்கு அமலாக்கத்துறை, நில அளவைத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சேர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சுமார் ரூ.5.85 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து அமலாக்கத்துறை அதனை முடக்கியுள்ளது. அதற்கான அறிவிப்பு பலகை வைத்து நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…