நிலத்தை அபகரித்த திமுக எம்பி ஆ.ராசாவின் சகோதரர்.. குடும்பமே தீக்குளிக்க முயற்சி : ‘அவங்க இலட்சணம் இதுதான்’ : அண்ணாமலை கடும் தாக்கு!!

Author: Babu Lakshmanan
22 February 2023, 8:06 pm

திமுக எம்பி ஆ.ராசாவின் சகோதரர் நிலத்தை அபகரித்து விட்டதாகக் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி, திமுகவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளும் திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு விதங்களில் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார். ஆட்சியாளர்கள் செய்யும் குறைகளை ஆதாரத்துடன் வெளிப்படுத்துவதால், ஆளும் திமுகவும், முதலமைச்சர் ஸ்டாலினும் பெருத்த அழுத்தத்தை சந்தித்து வருகிறது. அதேவேளையில், கிடைக்கும் கேப்புகளை எல்லாம், நன்கு வலுவாக பிடித்துக் கொண்டு, அதனை மக்களிடம் எடுத்துச் செல்வதில் பாஜக தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

Annamalai - Updatenews360

தற்போது, திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை தேசிய அளவிலான பிரச்சனையாக மாற்ற பாஜக முயற்சித்து வருகிறது.

மேலும், திமுக ஆட்சியில், கொலை, கொள்ளை மற்றும் கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டும் பாஜக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்னை ஊற்றி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் ஒரு குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறும் பாதிக்கப்பட்டவர்கள், திமுக எம்பி ஆ.ராசாவின் சகோதரர் தங்களின் நிலத்தை பறித்துக் கொண்டதாகவும், இது தொடர்பாக வழக்கறிஞர்களை நாடினால், அவர்களையும் வளைத்து போட்டுக் கொள்வதாகவும் கண்ணீர் மல்க தங்களின் குமுறல்களை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த அண்ணாமலை, திமுக என்றாலே, ஊழல் மற்றும் ரவுடிசம் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!