அதுக்காகத்தான் காத்திருக்கிறேன்… மனுஸ்மிருதி கையில் இருக்கு… தோல் உரிச்சு காட்டுவேன் ; திமுக எம்பி ஆ.ராஜா ஆவேசம்!!

Author: Babu Lakshmanan
21 September 2022, 2:12 pm

இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்பி ஆ.ராசா அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார்.

திமுக எம்பி ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என பேசியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, இந்து முன்னணியினர் திமுக எம்.பி. ஆ.ராசாவை மீது காவல்நிலையங்களில் புகார் அளித்ததுடன், அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். மேலும், தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்து வரும் ஆ.ராசா மீது கட்சி ரீதியான நடவடிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில், பாஜகவுக்கு சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற பொதுகூட்டத்தில் ஆ.ராசா பதில் அளித்துள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது :- உழைக்கிற இந்துக்கள் எல்லாம் ஒரு பக்கம், உழைக்காமல் சாப்பிடுகின்ற இந்துக்கள் எல்லாம் மறுபக்கம். அந்த இந்து எல்லாம் சனாதனம் இந்து, இது சாமானிய இந்து. நீங்கள் வேற இந்து, நாங்க வேற இந்து, சமத்துவம் பேசாத இந்து, சனாதன இந்து, எல்லோரும் சமம், எல்லோரும் கல்வி கற்க வேண்டும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், என்கிற கூறும் இந்த இந்துக்கள் எல்லாம் யார் தலைவன் என்றால் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின். உங்களுக்கு அவர்கள் எல்லாம் தலைவர்கள் இல்லை. உங்களுக்கு தலைவர் சங்கராச்சாரியார் என கூறினார்.

இன்றிலிருந்து சனாதன இந்து நமக்கு எதிரி. சபிக்கப்பட்டு, ஜாதியால் ஒடுக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டு, தாழ்த்தப்பட்டு படிப்பறிவு இல்லாமல் 100 ஆண்டுகளாக அடிமையாக ஆக்கப்பட்டு பெரியாரால், அண்ணாவால், கலைஞரால் பாதுகாக்கப்பட்ட இந்துக்களுக்கு எல்லாம் நாங்கள் தான். ராஜா மீது வழக்கு போடுவோம் என குரல் எழுப்புகிறார்கள். அந்த நாளை தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். உன்னுடைய மனுஸ்மிருதியை படித்து காட்டி, பகவத் கீதையை எடுத்துப் படித்துக் காட்டுவேன். யார் என்று தோல் உரிக்கவில்லை என்றால் நான் கலைஞரின் பிள்ளை இல்லை, என கூறினார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 487

    0

    0