நாங்க இந்திக்கு எதிரானவர்கள் அல்ல… சுந்தர் பிச்சை கூகுள் சி.இ.ஓ. ஆவதற்கு காரணம் தெரியுமா..? திமுக எம்பி தயாநிதி மாறன்..!!

Author: Babu Lakshmanan
24 September 2022, 11:33 am

சென்னை : நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், இந்தியை திணிக்காதே என்று தான் சொல்வதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை திமுக கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அயன்புரம், ஜாயிண்ட் ஆபீஸ் அருகில் திமுக முப்பெரும் விழா 3வது பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
தயாநிதி மாறன், கழக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் பங்கேற்ற திராவிடத் திருவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் :- திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய 73 ஆண்டுகள் ஆகிறது. 1949 ஆம் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம், அன்று எந்த குரலை ஒலித்ததோ, அதே குரலில் போராட்டத்தையும் 73 ஆண்டுகளாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அப்போதும் ஹிந்தி திணிப்பு, இன்றும் அதே பிரச்சனை இந்து திணிப்பு, இட ஒதுக்கீடு, அனைவருக்கும் கல்வி கொடுங்கள் என்றோம். இன்றும் கொடுக்கவில்லை. மறுத்தார்கள். சண்டைபோட்டு, சண்டை போட்டு இட ஒதுக்கீட்டை வாங்கி, இன்று நாம் வந்திருக்கிறோம். இன்று என்ன பிரச்சனை? அதே இட ஒதுக்கீட்டை தான், நாம் இன்றும் கேட்டு கொண்டிருக்கிறோம்.

பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நாம் வந்திருக்கிறோம். இன்று மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் நம்மை ஆளப் பார்க்கிறார்கள். அதை உணர்ந்து தான் நம் தளபதி அவர்கள் இந்து சமய அறநிலை துறைக்கு சேகர்பாபு அவர்களை அமைச்சராக வைத்துள்ளார். நாம் எப்போதெல்லாம் முன்னேற்றத்தின் பாதையில் செல்கிறோமோ, அப்போதெல்லாம் பிரித்து பிரித்து மதத்தின் பெயரால் சாதி பெயரால் அரசியல் செய்வதை எதிர்கின்றவர்கள் தான் நாம்.

கலைஞர் மறைந்து விட்டார். அவர் கொள்கையை எடுத்துச் செல்ல யாரும் இல்லை என நினைத்தார்கள். வந்தார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். என்ன செய்தார், அவர்களே சொல்கிறார்கள், கலைஞரை விட மோசமானவர் ஸ்டாலின் என சொல்கின்ற அளவிற்கு, கொள்கையில் எந்த விதத்திலும், இடம் கொடுக்காமல் இது திராவிட மாடல் இயக்கம், என்றார்.

திராவிட மாடல் என்றால் என்ன அனைவரும் சமம். அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் முன்னேற்றம். இது தவறா.? நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தியை திணிக்காதே என்று தான் சொன்னோம். என்ன பிரச்சனை இன்று பார்த்தீர்களானால், வட இந்தியர்கள் எல்லாம் இந்தி பேசி இந்தி பேசுகிறார்கள். நாங்கள் இந்தி பேச தயார் தேவைப்பட்டால், நாங்கள் பேச தயார். இந்தியை படிக்காமல் ஆங்கிலத்தால் படித்ததால் தான் கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை இருக்கிறார்..இவர் தமிழகத்தை சேர்ந்தவர் தான்

இவை தொடர வேண்டும் என்றால், ஆதிக்க சக்தி எதிர்க்க வேண்டும் என்றால், நமக்கு தேவை நம் தளபதியை பின்பற்றி திராவிட நாடு ஆட்சியை பின்பற்றி, தமிழ்நாட்டை முன்மாதிரியான முதல் மாநிலமாக மாற்ற வேண்டும். என்றுமே தமிழ் முதலிடம், வாழ்க தமிழ், வளர்க தந்தை பெரியார், வாழ்க கலைஞர், வாழ்க அண்ணா, என்று பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வா.வேலுவை வரவேற்று பேசிய அமைச்சர் சேகர்பாபு :- எதிர்ப்பவர்கள் எங்கு கிளம்பினாலும் துள்ளி வருவது வேல் பகையே தூர நில் என்கின்ற வேலுக்கு இலக்கமான அந்த சொல்லோடு எங்கெல்லாம் கழகத் தலைவருக்கும், தலைமைக்கும் நிழுக்கு என்று வருகிறதோ, அங்கே எல்லாம் மகிசாரணை வதம் செய்ய மேலாக நம்முடைய அருமை அண்ணன் ஏ.வா. வேலு அவர்கள் இருக்கின்றார்.

இதில் அவருக்கு வேண்டுமானாலும் கருத்து வேறுபாடு இருக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கந்த சஷ்டியை முழுமையாக நம்புகிறவர்கள் தமிழக மக்கள். சூரனை கந்தன் வதம் செய்த பொழுது வருவது வேல்தான். அந்த வேலாக வருகை தந்திருக்கும் அமைச்சர் ஏவா வேலு அவர்களை வரவேற்று பொன்னாடை அணிவித்து மகிழ்வித்தார் அமைச்சர் சேகர்பாபு.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வா வேலு :- 1928 தமிழக தமிழர்களுக்கு வேலை இல்லாத சூழ்நிலை உருவாகி இருந்தது. அப்போது, ஆட்சியில் இருந்த நம் முப்பாட்டன் நீதி கட்சி ஆட்சியில் தான். அன்று 1928 ல் மத்திய அரசில் தான் கம்யூனல் G.O என்று ஒரு சட்டம் இன்று ஒன்றை போட்டார். இட ஒதுக்கீடு முதன் முதலாக வித்திட்டது நம் பாட்டை நீதி கட்சி ஆட்சியில்தான். அந்த நீதி கட்சி ஆட்சியில் இருந்த அமைச்சர் முத்தையா முதலியார் தான் 1928ல் முதல் முறையாக அரசாணை வந்து வெளியிட்டார்.

1 டசன், 2 டசன் என்ற 12 நபர்கள் எண்ணிக்கையில் வேலைக்கு ஆள் எடுக்க வேண்டும் என்று சொன்னால், அரசாங்கத்தில் 2 பேர் அவாள், இஸ்லாமியர்கள் 2 பேர், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆட்சி செய்த நீதி கட்சியில், 2 பேர் ஆங்கிலேய இந்தியன் என 2 பேர் ஆக மொத்தம் இதர சாதிகளுக்கு 5 என மொத்தம் 12 பேர் 1 டசன் என்கிற அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்து, அதற்குப் பிறகுதான் அரசாங்கத்தின் வேலை கிடைத்தது.

அதற்குப் பிறகும் டசன் அடிப்படையில் தான் அன்றும் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. 1947க்கு பிறகு 1951 அக்ரஹாரத்தைச் சேர்ந்த செண்பகம், ஸ்ரீனிவாசன் என்கிற சென்னையில் விண்ணப்பம் ஒன்றை அளித்தார் கம்யூனல் G.O இருப்பதால் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை என்கிற காரணத்தால் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்று வழக்கு தொடுத்தார்.

விசாரணைக்கு பின்னர் கம்யூனல் G.O போடப்பட்டதற்கு பிறகு, இந்திய அரசியல் சட்டத்தில் அம்பேத்கர் அவர்கள் சட்டம் இயற்றிவிட்டார். பழைய சட்டம் கம்யூனல் G.O செல்லாது என தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்தது.

அன்றைய முதலமைச்சர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் குமார ராஜா டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சென்னை உயர்நீதிமன்றம் என்ன சொன்னது, அதையே சுப்ரீம் கோர்ட் மீண்டும் சொன்னது. கம்யூனல் G.O செல்லாது. மதிப்பெண் அடிப்படையில் தான் இனிமேல் செல்லும் என. அதனால் இட ஒதுக்கீடு கிடையாது என சுப்ரீம் கோர்ட் சொன்னது.

தமிழகத்தில் பேருந்துகள் இயங்கவில்லை. தந்தை பெரியார் பிரச்சினையை கையில் எடுத்தார். பேரறிஞர் அவரோடு, தோளோடு தோல் நிற்கிறார். கலைஞரும் அன்று கொடி பிடித்தார். தமிழகத்தில் பேருந்து ரயில் விமானம் எதுவும் ஓடவில்லை. இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு அவர்கள் தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் காமராஜர் அவர்களை தொடர்பு கொண்டு, பெரியார் உங்கள் நண்பர்தானே பிரச்சினையை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. கடைகளை திறக்குமாறும் பேருந்து, ரயில் விமானத்தை இயக்குமாறும் கூறினார். காமராஜர் சொன்னார், நான் எதை சொன்னாலும் பெரியார் கேட்பார். இட ஒதுக்கீடு விஷயத்தில் நான் சொன்னால் பெரியார் கேட்கமாட்டார். வேறு வழியில்லை. சட்டத்தை நீங்கள் திரும்பி பெறுவது தவிர என்று சொல்லி இந்திய அரசியல் சட்டத்தை 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்கள் இருக்கிறது.

இந்தியாவில் எழுதப்பட்ட அம்பேத்கர் பொது சட்டம் தான். அந்த சட்டத்தையோ முதல் முதலாக பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்காக இட ஒதுக்கீட்டு செல்லும் என சட்டத்தை நேரு திருத்தினார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். அதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் தான்.

1951ல் தந்தை பெரியார் மட்டும் அந்தப் போராட்டத்தை நடத்தவில்லை என்று சொன்னால், அவருக்கு தோளோடு அண்ணாவும், கலைஞரும் இல்லை என்று சொன்னால், இன்று இந்த இட ஒதுக்கீட்டை இன்று வரை நாம் அனுபவித்திருக்க முடியுமா…? முடியாது. அதனால் தான் திராவிட முன்னேற்ற கழகம் முப்பெரும் விழாவை நடத்துகிறது, என விழா பேருரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

  • Dhanush accused of troubling Keerthy Suresh கீர்த்தி சுரேஷ்க்கு தொல்லை : தனுஷை எச்சரித்த ரஜினி..வெளிவந்த ரகசியம்..!
  • Views: - 446

    0

    1