குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதை வரவேற்பதாகக் கூறிய திமுக எம்பி கனிமொழி, இது கருணாநிதியின் கனவு திட்டம் என்றும் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் திமுக அதை தடுக்க பார்க்கிறது என பிரதமர் கூறியதாக கேட்டபோது, மத்திய அரசு என்ன திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. தேர்தல் வருவதால் சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.
தொடர்ந்து எத்தனையோ திட்டங்களை தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் பிரதமரை சந்திக்கும் போது கோரிக்கையாக வைக்கிறார்கள். இருந்தபோதிலும் எதையும் நிறைவேற்றிக் கொடுத்ததில்லை. சமீபத்தில் வந்த புயல் மழை பாதிப்பின் நிவாரண தொகை கூட இதுவரையில் ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. இதுதான் உண்மையான நிலை, எந்த நல்ல திட்டத்தையும் தமிழ்நாடு அரசு தடுத்ததில்லை, எனக் கூறினார்.
பத்திரிக்கை விளம்பரம் குறித்து கேட்டதற்கு, “கோடிக்கணக்கான பணத்தை விளம்பரத்திற்கு செலவு செய்யும் கட்சி பாஜக. அவர்கள் செய்யும் விளம்பரத்தில் கூட தேசிய கொடியை போட்டு நான் பார்த்ததும் இல்லை, என்றார்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறது என தெரிவித்ததற்கு,”வீடு கட்டும் திட்டத்தில் கூட 75% பங்கு பணத்தை தமிழக அரசு தான் கொடுக்கிறது. அவர்கள் 70 ஆயிரம் ரூபாய் பணம் மட்டும் தான் கொடுக்கிறார்கள். அதை வைத்து யாரும் வீடு கட்ட முடியாது. மீதமுள்ள தொகையை மாநில அரசுதான் கொடுக்கிறது. ஆனால், அந்த வீட்டிற்கு பெயர் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம் என வைத்துள்ளது. இதில் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது.
எனக்கு தெரிந்த அளவில் பல மாநிலத்தில் இருந்து வரும் பிரமுகர்கள் இதற்கு ஏன் முதல் மந்திரி திட்டம் என பெயர் வைக்கவில்லை என்ற கேட்கிறார்கள்,” என்றார்.
திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என பாரத பிரதமர் கூறியதாக கேட்டதற்கு,”இதை கூறிய நிறைய பேரை நான் பார்த்துள்ளேன். ஆனால் அவர்கள் தான் காணாமல் போய் உள்ளார்கள். திமுக அப்படியே தான் இருக்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங் இருக்கும் போதிலிருந்தே ராக்கெட் ஏவுதலும் அமைக்கும் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதன் பிறகு பலமுறை திராவிட முன்னேற்ற கழகம் பாராளுமன்றத்தில் பேசிய பிறகு, நிலம் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு விரைவாக இடத்தை கொடுத்து இருக்கிறோம். அதுமட்டுமின்றி இப்பொழுது அறிவித்துள்ள பட்ஜெட்டிலும் தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கான 2000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது. இந்த திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காகத்தான். வேறு எங்கேயும் இந்த திட்டத்தை கொண்டு வர முடியாது. ஏனென்றால் ராக்கெட் ஏவுவதற்கான சரியான இடம் தமிழகத்தில் அறிவியல் பூர்வமாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து அந்த இடம் உறுதி செய்யப்பட்ட பின்னர் கொண்டுவரப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.
பத்திரிக்கை விளம்பரத்தில் சீனா ஏவுகணை போல் இருப்பதை குறித்து கேட்டதற்கு, அதை டிசைன் செய்தவர்கள் ஏதோ தவறு செய்திருக்கலாம். சீனாவின் தலைவரை நாட்டில் வரவழைத்து வாக்கிங் செல்கிறார்கள். சீனாவை எதிரி நாடு என யாரும் கூறவில்லை. மேடையில் கூட தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் ஏவா வேலு கலந்து கொண்டார்கள். நானும் இருந்தேன் எங்களின் பெயரைக் கூட சொல்லுவதற்கு பிரதமருக்கு மனமில்லை.
இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதில் எங்களுக்கு உரிமை இருக்கிறது. கலைஞரின் கனவு திட்டம் இது. அதனால் நாங்கள் கலந்து கொண்டோம். அவர்களுக்கு தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான் இதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, என்றார்.
மக்கள் பாஜக பக்கம் வர திரும்பி இருக்கிறார்கள், சித்தாந்தம் ஒற்றுப் போகிறது என கூறியது குறித்து கேட்டதற்கு, எனக்கு தெரிந்து நிச்சயமாக இல்லை. தமிழக மக்கள் பாஜக பெரும்பான்மை மக்களை மதத்தை வைத்து அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொண்டவர்கள். அரசியல் வேறு, மதம் வேறு, என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் தமிழக மக்கள்.
அதுமட்டுமின்றி பெரும்பான்மை மக்களுக்கு யார் அவர்களுடன் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களின் உரிமைக்காக போராடுவதும் திராவிட இயக்கம்தான் என்பதையும் தெளிவாக உணர்ந்து இருக்கிறார்கள், எனக் கூறினார்.
அயோத்தி ராமர் கோவில் வெளிநடப்பு குறித்து கேட்டதுக்கு, “அயோத்தி கோவில் கட்டுவது பற்றி யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதை அரசு சாதனையாக எப்படி கூற முடியும். தனிப்பட்ட அமைப்பு அந்த கோவிலை கட்டுகிறார்கள். அதை அரசு சாதனை என மாற்றுவது. நாங்கள் வெளிநடப்பு செய்தது என்பது கோயிலுக்கு எதிரானது அல்ல, அவர்கள் பேசிய பல்வேறு விஷயங்களை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.
சில ஆண்டுகளாக அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். எத்தனை சாதனைகளை நிறைவேற்றி உள்ளார்கள். எத்தனை கோரிக்கைகளை நிறைவேற்றினார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், எனக் கூறினார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.