பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… காழ்ப்புணர்ச்சி அரசியலை உருவாக்குகிறார்கள் ; திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
14 October 2023, 11:50 am

பாஜக ஆட்சியால் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது நிலவுவதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் உரிமை மாநாடு மற்றும் மகளிர் உரிமை திட்டம் என்ற வாசகத்துடன் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணல் சிற்பமானது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் புகைப்படம் தற்போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி புகைப்படத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பமானது 14 உயரமும் 20 அடி அகலமும் கொண்டுள்ளது. இந்த சிற்பத்தை நேற்றிலிருந்து வடிவமைக்கப்பட்டு வருகின்றனர். சிற்பத்தை 12 பேர் சேர்ந்து தொடர்ந்து 30 மணி நேரமாக வடிவமைத்துள்ளனர்

இந்த மணல் சிற்பத்தில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் படத்திற்கு கருப்பு, சிவப்பு என கலர் வண்ணங்களால் அலங்கரிக்கபட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் புதிதாக கொண்டு வந்த திட்டங்களின் புகைப்படங்களை கொண்டு 100 அடி அகலத்தில் மணல் சிற்பம் செய்யப்பட்டது

சென்னையில் மிகப்பெரிய அளவில் நடக்கும் ஒவ்வொரு விழாவிற்கும் இது போன்ற மன சிறப்பம் வைக்கப்படுவது வழக்கமாக செய்யப்பட்டு வருகிறது. அந்த நிலையில், தான் மகளிர் உரிமை மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கான மணல் சிற்பம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மணல் சிற்பமானது பொதுமக்கள் பார்வைக்காக ஒரு வாரம் வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, இந்த மகளிர் உரிமை மாநாட்டை முன்னிட்டு வைத்துள்ள மணல் சிற்பத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- இந்த மகளிர் உரிமை மாநாட்டில் பெண் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய பாஜக, நாடு முழுவதும் மக்களிடையே காழ்புணர்வு அரசியலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை மணிப்பூரில் அதிகமாக பாதிக்கப்பட்டோர் பெண்கள் தான். அரசியல் காரணத்திற்காக மக்களிடயே விரோதத்தை ஏற்படுத்துகிறார்கள் பாஜக-வினர்.

பாஜக ஆட்சியால் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலாக உள்ளது. பெண்களின் குரலை மையப்படுத்தக்கூடிய விதமாக இந்த மகளிர் உரிமை மாநாடு அமையும். இந்த நாட்டில் சரிசமமாக இருக்கக்கூடிய வாக்காளர்கள் பெண்களும் உள்ளார்கள்.

பெண்களை முன்னிலைப்படுத்துவதற்கும், ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த மாநாடு அமையும். இந்த மகளிர் உரிமை மாநாடு தேர்தலுக்கு ஒரு முக்கிய பங்காக இருக்கும், என்றும் கூறினார்

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 399

    0

    0