இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்… அப்படியாவது ஓட்டு கிடைக்காத என ஏங்கும் பாஜக ; பிரதமர் மோடியை விமர்சித்த கனிமொழி..!!!
Author: Babu Lakshmanan16 March 2024, 12:51 pm
பிரதமர் மோடி தமிழை நன்றாக கற்றுக்கொண்டு நல்ல தமிழில் பேச வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி திமுக, காங்கிரஸ் கட்சிகள் உடைத்தெரி தெரியப்படும் என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது குறித்து நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இவ்வாறு சொன்ன பல பேர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை,” என்றார்.
இது போன்ற நிறைய பேரை பார்த்து இருக்கிறோம் என்று கூறிய அவர், இதற்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை. இதற்கெல்லாம் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.
பிரதமர் தமிழகத்திற்கு தொடர்ந்து வருவதால் கட்சியின் வாக்கு வங்கி தமிழகத்தில் அதிகரித்து இருப்பதாக அவர்கள் கூறுகின்றார்களே, அப்படித்தானே அவர்கள் சொல்லியாக வேண்டும். அப்படியாவது ஓட்டு கிடைக்காதா என்று சொல்லி வருகிறார்கள், என்றார்.
பிரதமர் தமிழில் பேசுவது மகிழ்ச்சி எனக் குறிப்பிட்ட அவர், தமிழை நன்றாக கற்றுக்கொண்டு நல்ல தமிழில் பேச வேண்டும், என்றார். இதுவரை இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி வந்த நிலையில், தமிழை கற்று கொள்ள வேண்டும் என்று பிரதமர் விரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, வரவேற்கிறோம், என கூறினார்.