அத்வானி செய்ததை அமித்ஷா செய்ய மறுப்பது ஏன்..? புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பே இல்லை ; திமுக எம்பி கனிமொழி..!!

Author: Babu Lakshmanan
16 December 2023, 12:59 pm

புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை என்றும், போதுமான பாதுகாப்புகளும் ஏற்பாடு செய்யவில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை கேகே நகர், எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் 5000 நபர்களுக்கு நிவாரண பொருட்களானது திமுக மகளிரணி சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி பேசியதாவது :- பாராளுமன்றத்தில் வீசப்பட்ட புகைகள் சாதாரண புகை என அவைத்தலைவர் கூறியுள்ள கேள்விக்கு, முதலில் அந்த புகை சாதாரண புகையா அல்லது இல்லையா என்பதை தாண்டி, இந்த நாட்டினுடைய பாராளுமன்றத்தில் உள்ளே இரண்டு பேர். வெளியே இரண்டு பேர் என யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற வாய்ப்பு உள்ளது என்பதை அவர்கள் காட்டியிருக்கிறார்கள்.

அது ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அவர்களால் நச்சுப் புகையோ கொண்டு வர முடியும், துப்பாக்கியையோ எங்களால் கொண்டு வர முடியும் என்பதை காட்டியிருக்கிறார்கள். புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை, போதுமான பாதுகாப்புகளும் ஏற்பாடு செய்யவில்லை.

பிரதமர் கூட அந்த நேரத்தில் அங்கு இருந்திருக்கலாம். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி அங்கு இருந்தார். இது மிகவும் பாதுகாப்பான ஒரு இடமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு ஒன்றிய அரசு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும், பதிலளிக்க வேண்டும். போனமுறை பாராளுமன்றம் தாக்கப்பட்ட போது உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அது போன்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

குறைந்தபட்ச அடிப்படையான விஷயம் இது, பாராளுமன்றத்தில் இதுபோன்று ஒரு சம்பவம் நடந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும், இது போன்று பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் அறிக்கை விட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த நியாயத்தை கேட்டு போராடிய எங்களை என்னை உட்பட 15 பேரை இடைநீக்கம் செய்துள்ளார்கள் என்றால், இதில் நியாயம், நீதி, நேர்மை எங்குள்ளது..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 285

    0

    0