பட்டியலை CM-கிட்ட கொடுத்தாச்சு.. இனி எங்க திட்டமே அதுதான்.. நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக போட்ட பிளான் ; கனிமொழி ஓபன் டாக்..!!!

Author: Babu Lakshmanan
23 January 2024, 4:35 pm

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள் கல்வியாளர்களிடம் கருத்துகளை பெற திமுக தேர்தல் அறிக்கை குழு திட்டமிட்டுள்ளதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது :- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு இருக்கும் மக்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அதன் பின் தேர்தல் அறிக்கை குழு கூடி அறிக்கை தயார் செய்யப்படும். அதற்காக முதலில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியலை இன்றைய கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம் என கூறினார்.

இந்த பட்டியலை முதல்வரிடம் காண்பித்து ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அந்த ஊர்களுக்கு பயணம் செய்து எந்தெந்த கருத்துகளை எடுத்துக் கொண்டு நாங்கள் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்போகிறோம் என்பது குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு செய்யப்படும். எந்த விஷயத்தை முக்கியமான அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்பது முதல்வரிடம் அறிக்கையை கொடுத்த பிறகு தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

அமைப்புகளின் கருத்துகளை பெற மின் அஞ்சல்,அலைபேசி எங்கள் ஓரிரு நாட்களில் கொடுக்கப்படும். மேலும், தேர்தல் அறிக்கை எப்போதும் கதா நாயகனாக இருக்க வேண்டும் என்றில்லை கதா நாயகியாகவும் இருக்கலாம், என்றார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 336

    0

    0