திமுகவினர் மட்டும்தான் மணல் அள்ளனும்… மத்தவங்க மாதிரி நான் இல்ல… வைரலாகும் திமுக எம்பி ராஜேஷ் குமாரின் சர்ச்சை பேச்சு!!

Author: Babu Lakshmanan
27 September 2022, 10:56 am

திமுகவினர் மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்று தான் மட்டுமே அனுமதியளித்துள்ளதாக திமுக எம்பி ராஜேஷ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக அமைச்சர்கள், திமுக எம்பி, எம்எல்ஏக்களின் பேச்சுக்களும், செயல்களும் சர்ச்சைக்குள்ளாகியே வருகிறது. இதனை எதிர்கட்சிகளும் கண்டித்து ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இப்படியிருக்கையில், நாமக்கல் மாவட்ட திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ் குமார் தனது கட்சி நிர்வாகிகளை மணல் எடுக்க அனுமதிப்பது தொடர்பாக பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் பேசும் திமுக எம்பி ராஜேஷ் குமார், ” எம்எல்ஏ கே.பி. ராமசாமியையும் மணல் அள்ளுவதை நிறுத்தி விட்டேன். எந்த மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர்கள் கட்சிக்காரங்களை மணல் எடுக்க அனுமதிக்கிறது இல்ல. மத்தவங்க எல்லாம் நிறுவனங்களுக்கு டெண்டர் விட்டு, அவர்களிடம் பணம் வசூலித்துக்கொள்கிறார்கள். நான் மட்டும்தான் நமது கட்சியினரும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் மணல் எடுக்க அனுமதி வழங்குகிறேன்,” என்று கூறுகிறார்.

அவரது இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!