Pastor எங்கே?.. இமாம் எங்கே?… கோவிலில் திமுக எம்பி திடீர் சுவாமி தரிசனம்… தேர்தல் நாடகமா..? என விளாசும் நெட்டிசன்கள்…!!
Author: Babu Lakshmanan24 பிப்ரவரி 2024, 10:36 காலை
இந்து மத சடங்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி செந்தில் குமார், திடீரென கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நிகழ்வை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
திமுகவில் இருப்பவர்களில் பெரியார் கொள்கைகளை அதிதீவிரமாக கடைபிடிப்பவர்களில் திமுக எம்பி செந்தில்குமாரும் ஒன்று. தனது செயல்பாடுகள் மற்றும் சமூகவலைதளங்களில் போடும் பதிவுகளின் மூலமாக அதனை வெளிப்படுத்தி வருவார். ஒரு கட்டத்தில் இவரது செயல்பாடுகள் திமுகவில் உள்ள கடவுள் நம்பிக்கை கொண்ட சக நிர்வாகிகளாலே ஏற்றுக் கொள்ள முடியாதபடி இருக்கும்.
அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கும் திமுக எம்பி செந்தில்குமார், குறிப்பாக, அரசு திட்டங்களுக்கு பூமிபூஜை போடும் திமுகவினரின் செயலை தனியொரு ஆளாக எதிர்ப்பார். இதனால், சொந்த கட்சியிலேயே சில எதிர்ப்புகளை கொண்டிருப்பார்.
அரசு விழாக்களில் இந்து மத சடங்குகள் மட்டும் செய்வது ஏன்…? கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய முறைப்படி செய்யாதது ஏன்..? இது திராவிட மாடல் ஆட்சி என்று எல்லாம் பேசியிருந்தார். மேலும், மத சடங்களுகளின் படி அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்றால், அந்த நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்களை திமுக எம்பி செந்தில் குமார் தனது X தளத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், அந்தப் பதிவில், “வருடம் தோறும் மிகவும் சிறப்பாக நடைபெறும். பாலக்கோடு – அருள்மிகு ஶ்ரீ புதூர் பொன் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கருவறை உள்ளே PLR ரவி, சூர்யா மற்றும்
கழக தோழர்களுடன் கலந்து கொண்ட நிகழ்வு எனக் குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக எம்பி செந்தில்குமாரின் இந்த செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நெட்டிசன் ஒருவர், “சென்ற வருடம் சென்றீர்களா? இல்லை தேர்தல் வருவதால் இந்த வருடம் மட்டும் செல்ல நேர்ந்ததா?,” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, “ஆம் கடந்த ஆண்டும் சென்றேன்,” என பதிலளித்திருந்தார்.
மேலும், ஒரு நெட்டிசன், “ஏன் ஹிந்து கோவிலுக்கு மட்டும் போகிறீர்கள்? Church எங்கே? Pastor எங்கே? மசூதி எங்கே? இமாம் எங்கே? புத்த விகாரம் எங்கே? கொண்டயை மறையுங்க தோழர்,” என குறிப்பிட்டிருந்தார்.
மற்றொருவர், “மனசு சுத்தமா இருந்தா கருவறைக்குள்ல என்ன RBI கஜானா உள்ளையும் போகலாம் செந்திலு ஆனா நீ அறிவாலயதுக்கு தலைவர் ஆக முடியுமான்னு புதூர் பொன் மாரியம்மன்கிட்ட கேட்டு சொல்லாப்பா ,” எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன், “திமுக காரனுங்க தேர்தல் வந்தால் கோவிலுக்கு வருவீங்க! தேர்தல் முடிந்தவுடன் சாமி இல்லேன்னு சொல்லுவீங்க!,” எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, ஏராளமான நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
0
0