தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தாத தருமபுரி தி.மு.க. எம்.பி. : வைரலாகும் வீடியோ… கிளம்பிய கடும் எதிர்ப்பு!!

Author: Babu Lakshmanan
3 January 2023, 8:11 pm

தருமபுரி ; மாநில அளவிலான விளையாட்டு போட்டி துவக்க விழாவில் தேசிய கொடிக்கு தருமபுரி எம்பி செந்தில்குமார் மரியாதை செலுத்தாத நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியிலுள்ள சப்தகிரி பொறியியல் தனியார் கல்லூரியில் இன்று மாநில அளவிலான 63வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகளை தேசியக்கொடி ஏற்றிவைத்து, மரியாதை செய்த பின்னர், அமைச்சர் பன்னீர்செல்வம் விளையாட்டு போட்டியினை துவக்கிவைத்து, மாணாக்கர்களின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.

இதற்கு முன்னதாக, கொடியேற்றும் நிகழ்வின் போது, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

ஆனால், அமைச்சர் அருகிலே நின்று கொண்டிருந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தாத வீடியோ காட்சி தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ