இந்து முறைப்படி பூஜை.. திமுக எம்பி செந்தில்குமார் எதிர்ப்பு : பாதிரியார், இமாம்ம கூப்பிடுங்க… வைரலாகும் சர்ச்சை வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan16 July 2022, 6:56 pm
தர்மபுரி அருகே நடந்த விழாவில் முஸ்லிம் பிரமுகர்கள், கிறிஸ்தவ பிரமுர்களை ஏன் அழைக்கவில்லை என அதிகாரிகளிடம் திமுக எம்பி செந்தில்குமார் கடிந்து கொண்டு பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்க பூமி பூஜை ஏற்பாடு செய்தனர்.
அப்போது விழாவில் கலந்து கொண்ட தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடிந்து கொண்டார். மேலும் அரசு விழா என்றால் இந்து சமுதாயத்தை மட்டுமன்றி இஸ்லாமியர்கள் கிறிஸ்தவ பாதிரியார்களை மற்றும் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து இது போன்ற பணியை துவங்க வேண்டும் . இது திராவிட மாடல் அரசு பூஜையை நிறுத்திவிட்டு செந்தில்குமார் பணியை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இந்து இன்று சமய அறநிலைத்துறைகுமட்டும் தான் தனியாக அமைச்சர் உள்ளார். இதன் மூலம் வரும் வருவாய் மூலம் பல அரசு நலத்திட்ட பணிகள் நடந்து வருகிறது இஸ்லாமிய., கிறிஸ்தவர்களுக்கு அரசு சார்பாக வருவாயும் அரசுக்கு வழங்கப்படுவதில்லை.
பூமி பூஜை செய்யக்கூடாது என்று கூறும் எம்பி செந்தில் குமார் திமுக தலைவர் ஆன முதல்வர் ஸ்டாலினிடம் இந்து சமய அறநிலையத்துறை வேண்டாம் என சொல்ல தைரியம் இருக்கிறதா என்று விழாவில் பங்கேற்ற பலர் முணுமுணுத்தனர்.
இது குறித்து திமுக எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள் என வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.