இருக்கை ஒதுக்கியதில் அதிருப்தி… குடியரசு தின விழாவை புறக்கணித்து பாதியில் வெளியேறிய திமுக எம்பி..?

Author: Babu Lakshmanan
26 January 2023, 10:16 am

இருக்கை முறையாக ஒதுக்கப்படவில்லை எனக் கூறி, திமுக எம்பி எம்எம் அப்துல்லா, குடியரசு தினவிழாவை புறக்கணித்து, பாதியில் வெளியேறியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 73வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னையில் ஆளுநர் ஆர்என் ரவி தேசிய கொடியேற்றி ஏற்றி, மரியாதை செலுத்தினர். மேலும், மாவட்டந்தோறும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவை திமுக எம்பி எம்.எம். அப்துல்லா புறக்கணித்ததாக கூறப்படுகிறது. விழாவில் தனக்கு முறையான இருக்கை ஒதுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி விழாவை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டையில் நடைபெறும் குடியரசுத் தின விழாவை திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா புறக்கணித்து சென்றதாக தகவல் வெளியான நிலையில், தனக்கு இருக்கை முறையாக ஒதுக்கப்படவில்லை என்று கூறி கொடியேற்றும் முன்பே பாதியில் அங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திமுக எம்பி அப்துல்லாவை தொடர்புகொண்டு கேட்டபோது, தனக்கு முக்கியமான பணி இருப்பதாலேயே கிளம்பியதாக கூறினார். அதேவேளையில், தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவதை காட்டிலும் திமுக எம்பி முக்கியமான வேலை என்று எதனை குறிப்பிடுகிறார் என்ற கேள்வி எழுப்பி வருவதுடன், மக்கள் பிரதிநிதியான திமுக எம்பி தேசிய கொடியை அவமதித்து விட்டதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி