நாம் ஏன் தோத்துக்கிட்டே இருக்கோம்…? அன்புமணி பதவியேற்பு விழாவில் உணர்ச்சி பொங்கிய ராமதாஸ்… கலாய்த்த திமுக எம்பி… விளாசும் பாமக தொண்டர்கள்..!!

Author: Babu Lakshmanan
28 May 2022, 2:15 pm

கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகளாகியும் பாமகவுக்கு வெற்றி கைகூடவில்லை என்பது குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசிய ராமதாஸின் பேச்சை கிண்டல் செய்த திமுக எம்பியை பாமக தொண்டர்கள் கடுமையாக விமர்சித்தும், எச்சரித்தும் வருகின்றனர்.

பாமக கட்சி தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அக்கட்சியின் 3வது தலைவராக அன்புமணி ராமதாஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 25 ஆண்டுகளாக அப்பதவி வகித்து வந்த ஜி.கே. மணி, கட்சியின் எதிர்காலத்தை கருதி, அன்புமணி ராமதாஸுக்கு வழிவிட்டு ஒதுங்கிவிட்டார்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில்
கட்சியின் முக்கிய தலைவர் ஜி.கே மணி, ஏ.கே மூர்த்தி போன்றோர் அன்புமணி ராமதாசுக்கு வெள்ளி ஸ்தூபி கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, அன்புமணி கட்டியணைத்து கண்கலங்கினார் ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸுக்கு பாமகவின் தலைவர் பதவி கொடுத்ததன் மூலம் வாரிசு அரசியலில் பாமகவும் இணைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், கட்சியின் வளர்ச்சிக்காக இந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அக்கட்சியின் சீனியர் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

அன்புமணிக்கு தலைவர் பதவியை கொடுத்த பிறகு கட்சி நிர்வாகிகளிடம் ராமதாஸ் உருக்காமாக பேசினார். அவர் பேசியதாவது :- இத்தனை காலம் கட்சிக்காக பாடுபட்டு உழைத்தவர் ஜி.கே.மணி; ஜி.கே.மணிக்கு பாமக கௌரவ தலைவர் என்ற பொறுப்பை வழங்குகிறோம். 43 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வருகிறேன், இன்னும் அந்த கோலைத்தான் நான் ஏந்தவில்லை; தற்போது மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணியை கோட்டையில் அமரவைக்க இங்கே ஒரு குடும்பமாக நாம் வருகை புரிந்துள்ளோம்.

ரியல் எஸ்டேட் பிசினஸில் நீங்கள் காட்டுகிற ஆர்வத்தை ஏன் கட்சியை உயர்த்துவதில் காட்டவில்லை? 100 வாக்குகள் என்னால் வாங்க முடியும், எனக்கு பதவி எதுவும் வேண்டாம் என உழைத்து அன்புமணியை முதலமைச்சர் ஆக்குபவன் தான் உண்மையான தொண்டன். சில காக்கைகள் வரும் போகும், ஆனால் உழைப்பவரை உடன் வைத்துக்கொள்ள வேண்டும், அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என அன்புமணிக்கு கூறியுள்ளேன்;

2012ல் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி 2013ல் ஆட்சியை பிடித்தது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி. ஆனால் நம்மால் ஏன் முடியவில்லை? நம்முடைய கொள்கைகள் போல் நாட்டில் வேறு கட்சிகள் ஏதாவது கொள்கைகளை கொண்டுள்ளதா? இல்லையெனில் ஏன் நம்முடைய பலம் 4லிருந்து 40 ஆக மாறவில்லை? இது யார் குற்றம்? இந்த குற்றத்தை மீண்டும் நீங்கள் செய்யப்போகிறீர்களா?,என உருக்கமாக பேசினார்.

ராமதாஸின் இந்தப் பேச்சை கிண்டல் செய்து திமுக எம்பி செந்தில்குமார் டுவிட் போட்டுள்ளார். “100 வாக்குகள் என்னால் வாங்க முடியும், எனக்கு பதவி எதுவும் வேண்டாம் என உழைத்து அன்புமணியை முதலமைச்சர் ஆக்குபவன் தான் உண்மையான தொண்டன்,” என ராமதாஸ் பேசியதைக் குறிப்பிட்ட அவர், “ஐயா எங்க ஊர் பக்கம் 111 வாக்கு வாங்குவாங்க. அப்போ அந்த தொண்டன் செல்லாத தொண்டனா?, ஒரே confusions,” எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவுக்கு பாமக தொண்டர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 808

    0

    0