‘அவங்க பாவிகள்… அய்யா மீது கைவைத்தால் கையை வெட்டுவேன்’; திமுக எம்பி டிஆர் பாலு சர்ச்சை பேச்சு…!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
28 January 2023, 10:40 am

மதுரையில் திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், கையை வெட்டுவேன் என திமுக எம்பி டிஆர் பாலு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பழங்காநத்தம் பகுதியில் திறந்தவெளி மாநாடு நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தென் மாவட்ட மக்களுக்கு நன்மை அளிக்கும் சேது சமுத்திர திட்டத்தை வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு தடுத்து விட்டதாகவும், ராமரின் பெயரைக் கூறி தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற முடியாது என்றும் பேசினார்.

இந்த மாநாட்டில் திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு பேசியதாவது :- சேது சமுத்திர திட்டம் நிறைவேறியிருந்தால், சுமார் 70 சதவிகித கப்பல்கள், அந்த கால்வாய் வழியாக சென்றிருக்கும். மேலும், ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் சேது சமுத்திர திட்டத்தை தடுத்தவர்கள் நன்றாகவே இருக்க மாட்டார்கள்.

தனது கட்சி தலைவரை சீண்டினாலோ, அய்யா வீரமணி மீது கைவைத்தாலோ அவனது கையை வெட்டுவேன், கையை வெட்டுவது தான் நியாயம், தர்மம். நியாயம் இல்லைன்று சொல்லலாம், அதை கோர்ட்டுல போய் சொல்லுங்க, என்று கூறினார்.

ஏற்கனவே, திமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், திமுக எம்பி டிஆர் பாலுவின் இந்த பேச்சு திமுக தலைமைக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!