தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அவர் தைரியமாக இருந்தார் என்றும், அவருடைய கைதில் ஏராளமான அத்துமீறல்கள் இருந்ததாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் “நள்ளிரவில் கலைஞர் கைது” புத்தகத்தை முன்னாள் நீதிபதி கே.சந்துரு மற்றும் மூத்த வழக்கறிஞரும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் ஆகியோர் வெளியிட்டனர்.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் பேசியதாவது :- தமிழக முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்ட போது எவ்வளவு அத்துமீறல் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கைது செய்யப்பட்ட கலைஞர் கருணாநிதியை நேரில் பார்க்க நான் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட கலைஞர் நீதிபதி அசோக்குமார் இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். நீதிபதி கலைஞர் கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உத்தரவிட்டார். அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கும் காயம் ஏற்பட்டது. முன்னாள் முதல்வரை சரியாக நடத்தவில்லை. கைது செய்யப்பட்ட பிறகு கலைஞர் உடன் நானும் காரில் சென்றேன். அந்த கார் மருத்துவமனைக்கு செல்லாமல் சிறைக்கு சென்றது. அப்போது, கலைஞர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மருத்துவ சிகிச்சை செய்யாமல் நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டது ஏன்?
பிறகு சிறிது நேரம் கழித்து எனக்கும், அங்கிருக்கும் காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். இது மிகவும் கொடூரமான தாக்குதல். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இது நடத்தப்பட்டது. சிறையிலும் கலைஞர் கருணாநிதி தைரியமாக இருந்தார். மொத்தமாக 5 நாட்கள் சிறையில் இருந்தார். இந்த சம்பவங்களை சுரேஷ்குமார் அழகாக புத்தகத்தில் கொண்டு வந்துள்ளார். ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருக்கும் போது எப்படி நடக்கும் என்று உணர வேண்டும். இந்த புத்தகத்துக்கு முன்னாள் நீதிபதி சந்துரு முகவுரை எழுதி உள்ளார்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் இதை பத்தி அதிகம் பேச விரும்பவில்லை. கலைஞர் மீதான வழக்கு முழுக்க முழுக்க பொய்யான புகார். இது ஒரு நல்ல புத்தகம். கலைஞர் கருணாநிதி குறித்து வருங்கால சந்ததியினர் புரிந்து கொள்ளும் வகையில் இந்த புத்தகம் இருக்கிறது, என்றார்.
கலைஞர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டது வரலாற்றில் முக்கியமானது; கலைஞர் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றம் எப்படி செயல்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், எனக் கூறினார்.
நள்ளிரவில் கலைஞர் கைது புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசியதாவது:- நான் இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறேன். ஒரு ஊடகவியலாளர் தான் பார்த்ததை அப்படியே எழுதி ஆவணப்படுத்துவது மிகவும் முக்கியம். அப்படி பத்திரிகையாளர் சுரேஷ் குமார் கலைஞர் கருணாநிதி கைதை புத்தகமாக எழுதியது வரவேற்கத்தக்கது. கலைஞர் கருணாநிதி கைது என்பது வரலாற்றில் முக்கியது. 2021-ம் ஆண்டு கலைஞர் நள்ளிரவில் கைதில் வரலாற்றில் முக்கியம். 2001-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு அந்த அம்மையார் ஆடாத ஆட்டம் இல்லை. கலைஞர் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றம் எப்படி செயல்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நண்பர் சுரேஷ்குமார் நீதிமன்ற நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளார்.
அவரது கைது சட்டப்படி நியாயமா? முன்னாள் முதல்வர் கலைஞரை நாயை விட மோசமாக கைதின் போது நடத்தி இருக்கிறார்கள். அப்படி இந்த கைதின் போது நீதிபதி சுரேஷ்குமார், இந்த கைதில் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும். நடைமுறையில் சாதாரண மக்கள் கைது செய்யப்படும் பொழுது மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். கலைஞர் கைது ஒரு தவறான முன்னுதாரணம். அப்போது, மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலைஞரை நேரில் சந்தித்து விசாரித்து அறிக்கை அளித்தார். அப்போது தமிழக ஆளுநர் மாற்றப்பட்டார். இப்போதும் ஒரு ஆளுநர் இருக்கிறார். கலைஞர் கைதின்போது மாநில ஆளுநர் தனது பொறுப்பை சரியாக உணர்ந்து செயல்படவில்லை, என்றார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.