தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. கொலை மிரட்டல் கொடுத்து குடைச்சல்!
Author: Udayachandran RadhaKrishnan12 October 2024, 2:58 pm
திமுகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிரமுகரின் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது.
தமிழக அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இந்த மாநாட்டில் இணைய உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திமுகவில் இருந்து விலகிய நிர்வாகி தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் சேர்ந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள வீராசாமி, ஏற்கனவே தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்.
அவர் மீது ஊராட்சி மன்ற பணிகள் குறிதது அடிக்கடி புகார் வந்த நிலையில், அவர் மீதுள்ள புகாரை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது.
விசாரணைக்கு பின்னர் ஊராட்சி மமன்ற தலைவர் வீராசாமி மற்றும் துணைத் தலைவர் லோகேஸ்வரி மீது காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதனால் அதிருப்தியில் இருந்த அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தேமுதிகவில் சுயேச்சையாக நின்று தான் வெற்றி பெற்றேன். பின்னர் திமுகவில் இணைந்தேன். தற்போது என் அதிகாரத்தை பறித்ததால் மன உளைச்சலில் இருந்து வெளியே வந்து, தவெக வில் இணைந்ததாக கூறியுள்ளார்.
ஆனால் தற்போது எனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், பதவியை பறிக்க ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் என் மீது ஊழல் கரை உள்ளதா இல்லையா என்பது அவர்கள் முடிவெடுக்கட்டும் என கூறியுள்ளார்.