கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கி முடிந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் பட்டியல் வெளியானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதையொட்டி, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் இழுபறிக்கு பிறகு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இருப்பினும், காங்கிரசுடனான தொகுதிகள் ஒதுக்குவதில் மட்டும் இழுபறி நீடித்து வந்தது.
அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல், மதுரை தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரமும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், மதிமுகவுக்கு திருச்சியும் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரசுக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, கடலூர், சிவகங்கை, விருதுநகர், கரூர், மயிலாடுதுறை, நெல்லை, புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை ஒதுக்கப்பட்ட திருச்சி, தேனி தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களமிறங்க உள்ளது.
திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் விபரம்
வடசென்னை
மத்திய சென்னை
தென் சென்னை
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர்
ஈரோடு
நீலகிரி
திருவண்ணாமலை
வேலூர்
தென்காசி
தர்மபுரி
கள்ளக்குறிச்சி
பொள்ளாச்சி
தூத்துக்குடி
கோவை
அரக்கோணம்
சேலம
தஞ்சாவூர்
பெரம்பலூர்
ஆரணி
தேனி
குறிப்பாக, கடந்த தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டு வந்த கோவை மற்றும் தேனி தொகுதிகளில் திமுக நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.