தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தேரோடும் வீதியில் தேர் போன்று அமைக்கப்பட்டிருந்த மேடையில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பாமக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என கேட்டதற்கு திமுக அளித்தது எங்கும் மது எதிலும் மது. திமுகவின் வீழ்ச்சி மதுவிலக்கு துறை அமைச்சர் முருகன் பெயரும் பாதியும் பெருமாள் பெயரும் பாதியும் கொண்ட செந்தில் பாலாஜியால் ஏற்படும் என்றார். முதலமைச்சரிடம் பலமுறை தற்போதுள்ள மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிவிட்டு அந்த பதவிக்கு சமூக அக்கறை உடைய ஒரு நபரை நியமிக்க வேண்டும் என பலமுறை எடுத்துக் கூறி விட்டோம் எனவும் திமுக ஆட்சியில் மதுவை திணித்து திணித்து தற்போது உள்ள தலைமுறைகளை போதைப் பழக்கத்திற்கு முழுமையாக அடிமையாக்கி விட்டதுதான் திராவிட மாடல் என குற்றம்சாட்டினார். தற்போது உள்ள தலைமுறையை காப்பாற்ற முடியாது அடுத்த தலைமுறையாவது காப்பாற்ற பாமகவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் பேசினார்.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் அமிர்த கண்ணன் உழவர் பேரியக்க செயலாளர் கோ. ஆலயமணி மாநில செயற்குழு உறுப்பினர் பானுமதி சத்யமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் எம்பிக்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மகா ஸ்டாலின் பிரம்மாண்ட சுத்தியல் ஒன்றை வழங்கினார். மாவட்ட பாமக சார்பில் ஏர் கலப்பை நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.