அண்ணாமலை சத்தம் வரும் ஒரு காலி பாத்திரம்… ஆருத்ராவின் ரூ.2,500 கோடிக்கு பினாமியே அண்ணாமலை தான் – ஆர்எஸ் பாரதி குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
26 July 2023, 9:46 pm

அண்ணாமலை சத்தம் வரும் ஒரு காலி பாத்திரம் போல தான் என்று திருச்சியில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 2019-ல் எப்படி மோடிக்கு எதிராக அலை வீசியதோ, அதைவிட அதிகமாக அலை வீசக்கூடிய அளவுக்கு தேர்தல் களத்து துவக்கத்திலேயே தெரிகிறது. எனவே, வருகின்ற 2024இல் திமுக 40க்கு 40 வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால், மக்களுடைய கவனத்தை மேலும் திசை திரும்ப வேண்டும் காரணத்தினால் சிலர் சில வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதைப்பற்றி எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் கவலைப்படவில்லை. குறிப்பாக, இன்று பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே இருக்கும் எழுச்சியை பார்த்துவிட்டு திசை திருப்பதற்காக, ஏதோ புகார் கொடுப்பது வாய் புளித்தது, மாங்காய் புளித்தது போல ஆளுநர் இடத்தில் கொடுத்து இருக்கிறார்.

நாங்களும் கவர்னரிடத்தில் புகார் கொடுத்து இருக்கிறோம். 1995இல் நாங்கள் கொடுத்த 10 குற்றச்சாட்டில் ஜெயலலிதா மீதும் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டினோமோ அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, குறிப்பாக ஏதாவது அண்ணாமலை சொல்லி இருக்கிறாரா…? ஏப்ரல் 14ல் இதே போல் பட்டியலில் வெளியிட்டு இருந்தார். அதன் மீது தற்பொழுது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இன்று கவர்னரிடத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கு தலைவர் பதில் சொல்லுவார்.

பிரச்சனை திசை திருப்பதற்காக இதை சொல்லி இருக்கிறார். இதெல்லாம் நாங்கள் சந்திப்போம். திமுக மீது போடப்பட்ட அத்தனை வழக்குகளில் விடுபட்டு இருக்கிறோம்.
பொய் சொல்வதற்கு அவர்கள் எல்லை மீறி போகிறார்கள். ஆருத்ராவில் இருக்கும் 2500 கோடிக்கு பினாமி அண்ணாமலை என்று சொல்லலாம். இதற்கு அர்த்தம் என்னவென்று தெரியவில்லை. தமிழகத்தில் மணிப்பூர் விவகாரம் ஒவ்வொரு தாய்மார்களே பேசக்கூடிய அளவு எடுபட்டு விட்டதால், அதை திசை திருப்புவதற்காக புகார் கொடுத்திருக்கிறார்.

ED ரைடு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. ED என்பது எப்படி நடைபெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். 2004 இல் பிஜேபி ஆட்சியை எதிர்த்து முதன்முதலாக நடந்த தேர்தலில் பிஜேபி ஆட்சியை விட்டுப் போனது. இந்த முறை பிஜேபி ஆட்சி போகும் தமிழகத்தில் 40க்கு 40திமுக வெற்றி பெறும்.

அண்ணாமலை போட்ட வழக்கு ஒன்று கூட கர்நாடகத்தில் நிற்கவில்லை என்று கர்நாடகா தேர்தலில் எல்லாம் சொன்னார்கள். இப்படி பேசுவதால் ஊழல் செய்தவர்கள் மேல் கூட மக்களுக்கு ஒரு அனுதாபம் ஏற்படும். இவருக்கு இதுதான் வேலை என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலை கொண்டு வந்து விட்டார். அண்ணாமலை ஒரு காலி பானையில் சத்தம் வரும் ஒரு பாத்திரம் போல தான், எனக் கூறினார்.

தொடர்ந்து, அண்ணாமலை யாத்திரை குறித்த தானே கேள்விக்கு பதிலளித்த அவர், முருகன் வேலோடு அன்று போனார். அந்த யாத்திரை என்ன ஆச்சு. முருகன் வேலுக்கு இருந்த மரியாதை கூட அவருக்கு இல்லை. அது முருகனுடைய வேலா… அண்ணாமலை வாலா… என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும், என்ன தெரிவித்தார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 397

    0

    0