இலையை எடுக்க வேண்டிய வேலை மட்டும்தான்.. திமுகவை எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை : ஆளுநருக்கு ஆர்எஸ் பாரதி எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
9 May 2023, 1:25 pm

இலை எடுக்க வேண்டிய கவர்னர், இலையை எண்ண தொடங்கினால் அண்ட சராசரங்கள் வெளியில் வந்துவிடும் என்று ஓசூரில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி மூக்கண்டப்பள்ளி பகுதியில் திமுகவின் 2ஆண்டுகள் ஆட்சியின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. ஓசூர் MLA பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ்.பாரதி பங்கேற்று உறையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- கவர்னருக்கு மரியாதையாக சொல்லிக் கொள்கிறேன். கிராம பகுதிகளில் “இலை எடுப்பவன் இலையை மட்டும் தான் எடுக்கனும், எண்ணக்கூடாது” என்பார்கள். கவர்னருக்கு எடுக்கிற பதவிதானே தவிர, எண்ண தொடங்கினால் கவர்னரின் அண்ட சராசரங்கள் வெளியே வந்துவிடும்.

1 கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டவர்களை விட, 5 கோடி ரூபாய்க்கு ராஜ்பவனில் டீ, காபி சாப்பிட்ட R.N.ரவி எங்களை பார்த்து பேசுவதா..? திமுகவை எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை, என பேசினார்.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!