எதிர்க்கட்சிகளை தொட்டால் இந்தியாவே அலறும்… இன்னும் 5 மாதங்கள் தான், கவுண்டன் ஆரம்பம்.. பாஜகவை எச்சரிக்கும் ஆர்எஸ் பாரதி!!

Author: Babu Lakshmanan
17 July 2023, 12:52 pm

இன்னும் ஐந்து மாதங்கள் தான் பாஜகவின் ஆட்சி உள்ளதாகவும், அதற்கான கவுண்டன் ஆரம்பித்து விட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவர் தொடர்புடைய பகுதிகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- கடந்த மார்ச் 1ஆம் தேதி முதலமைச்சர் பிறந்த நாளில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடிய சமயத்தில் யார் பிரதமராக வரக்கூடாது என்ற முழக்கத்தை எழுப்பினார்.

அந்த முழக்கத்தை என்றைக்கு அவர் முன்வைத்தாரோ, அதிலிருந்து தொடர்ந்து ஒன்றிய அரசு, ஆளுநர் மூலமாக சில நெருக்கடிகளையும், இப்பொழுது அமலாக்கத்துறை மூலமாக பாட்னாவிலேயே நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்திலே ஸ்டாலின் கலந்து கொண்டு, சென்னைக்கு திரும்பியவுடன் அந்த வேகத்திலேயே செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அந்த வழக்கு உச்சநீதிமன்ற வரை சென்று இருக்கிறது.

இன்றும், நாளையும் கர்நாடக மாநில பெங்களூரில் அகில இந்திய அளவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுகின்றன. இவர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, இன்றைக்கு பொன்முடி வீட்டில் சோதனை செய்கிறார்கள் வருகின்றார்கள். அவரின் வழக்கறிஞராக நான் அவரை பார்க்க வந்தேன். 2006 இல் இருந்து 2023 வரை அவர் மீது உள்ள வழக்கில் சம்பந்தமாக வீட்டில் சோதனை நடத்தி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அமலாக்க துறைக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கிறதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இதே போல் கர்நாடகாவில் டி கே சிவகுமார் வீட்டில் பல்வேறு சோதனை செய்து நெருக்கடி கொடுத்து ஆளாக்கினார்கள். ஆனால் இந்தியாவிலேயே அதிகபட்சமான ஓட்டில் டி கே சிவகுமார் தேர்தலில் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
கர்நாடக மாநிலத்தில் எப்படி பின்னடைவு ஏற்பட்டதோ, அதேபோன்றுதான் தமிழகத்திலும் ஏற்பட வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதையெல்லாம் காட்டி மிரட்ட முடியாது. இன்னும் ஐந்து மாத தான் இவர்கள் ஆட்சி இருக்கிறது. மத்திய அரசின் கவுண்டன் ஆரம்பித்துவிட்டது. காஷ்மீர் இருந்து கன்னியாகுமரியில் இருந்து 140 லிருந்து 120 சீட்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

இது போன்ற உள்ள இந்த காலத்தில் எதிர் கட்சிகளை நசுக்க வேண்டும் என்றால், இது அகில இந்திய பிரச்சனையாக இருக்கும் என்று நாளை நடைபெற இருக்கும் கூட்டத்தில் பேசப்படும் என்று நினைக்கிறேன். செந்தில் பாலாஜி விவகாரத்தில் எங்களுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. மத்திய அரசுக்கு தான் பின்னடைவு ஏற்படும். ஜெயலலிதாவின் டான்ஸ் வழக்கில் இதேபோன்றுதான் சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. அதை எடுத்து நான் தான் உச்சநீதிமன்றத்திற்கு சென்றேன். ஆனால், அதில் தீர்ப்பு சரியாக அளிக்கப்படவில்லையா..? என அவர் தெரிவித்தார்

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!