திமுக ஆட்சி பல பத்து ஆண்டுகள் தொய்வில்லாமல் தொடரும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2023, 12:42 pm

2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி புரிந்து வந்த அதிமுக அரசிற்கு முடிவுகட்டி கடந்த 2021-ம் தேர்தலில் வெற்றிவாகை சூடி ஆட்சியைக் கைப்பற்றியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனைக் திமுகவினர் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். திமுக அரசு வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது, ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது. தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம்.

துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம். திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும் என பதிவிட்டுள்ளார்.

  • Nayanthara calls off Lady Super Star லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?