மெழுகுவர்த்தி போல திமுக ஆட்சி உருக்குலைந்து போகும்… CMக்கு வெட்கமே இல்லையா? அண்ணாமலை ஆவேசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 7:23 pm

ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக முன்னாள் ராணுவ வீரர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

இதில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அந்தவகையில், அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ;

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ரவுடிகளுக்கு கூட தி.மு.க. அரசு மீது பயம் இல்லை. மெழுவர்த்தி எரிந்து உருக்குலைந்து போவது போல தி.மு.க. ஆட்சியும் போகும். 2 மாதத்திற்கு ஒருமுறை இந்திய அளவில் பேசப்படும் பிரச்சினை தமிழகத்தில் இருந்து உருவாகிறது என குறிப்பிட்டு பேசினார்.

இந்தியாவில் ஒரு ஈகோசிஸ்டம் உள்ளது. ஜே.என்.யூ ஈகோ சிஸ்டம், ஜந்தர் மந்தர் ஈகோ சிஸ்டம். எங்கேயாவது அரியானாவில் ஒரு நாய் செத்துப் போயிருக்கும். பிஜேபி ஆட்சியில் இருக்கும். உடனே கனிமொழி மெழுகுவர்த்தியுடன் வருவார்கள். உத்தர பிரதேசத்தில் ஒரு குரங்கிற்கு வயிறு சரி இல்லாமல் போயிருக்கும். அந்த குரங்கிற்கு வயிறு சரியில்லாமல் போனதற்கு யோகி ஆதித்யநாத் தான் காரணம் என்று மெழுகுவர்த்தியை தூக்கிக் கொண்டு குறுக்கவும் மறுக்கவும் ஓடுவார்கள். இன்றைக்கு அந்த கும்பல் எங்கே சென்றது.

மெழுகுவர்த்தியை யார் கையில் எடுத்தாலும் அது மொத்தமாக எரிந்து கீழே வந்துவிடும். அதேபோலத்தான் உங்க (திமுக) ஆட்சி. மெழுகுவர்த்தி போல உங்க ஆட்சி எரிந்து கொண்டு இருக்கிறது. அது உங்களை உணர்த்துவதற்காகத்தான்.

மெழுகுவர்த்தி எப்படி எரிந்து உருக்குலைந்துபோகிறதோ அதேபோல்தான் உங்கள் ஆட்சியும். உங்கள் ஆணவம் இப்போது தலைவிரித்து ஆடினாலும் கூட அதற்கும் நேரமும் காலமும் இருக்கத்தான் செய்கிறது.

2024-ல் முழுமையாக எரிகிறதா? 2026-ல் முழுமையாக எரிகிறதா என்பதை காலமும் அரசும் ஜனாதிபதியும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தினமும் இப்படி இரண்டு மாதத்திற்கு ஒரு பிரச்சினை சென்று கொண்டிருந்தால் எப்படி அரசை நடத்துவீர்கள். இந்திய அளவில் பேசப்படுகிற ஒரு பிரச்சினை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தமிழகத்தில் இருந்து தான் உருவாகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆடுபட்டி போல மனிதர்கள் பட்டி உள்ளது. ஒரு பூத்திற்கு 100 பேரை அடைத்து வைத்துள்ளனர். 238 பூத்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளது.

238 பட்டிகள் போடப்பட்டுள்ளது. அந்த பட்டிகளுக்குள் நம்மை போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் யாரும் அவர்களை பார்த்து பிரசாரம் செய்யக்கூடாது என ஒரு நாளைக்கு ஆயிரம் கொடுத்து இப்படி அடைத்து வைத்திருக்கிறார்கள்.

பஞ்சம் தலைவிரித்தாடும் நாடுகளில் கூட இப்படி மனிதப்பட்டிகள் கிடையாது. கேட்டால் திராவிட மாடல் என்கிறார்கள். வெட்கமாக இல்லையா? இப்படி எலக்‌ஷெனை ஜெயிக்கனுமா? முதல்வருக்கு வெட்கமாக இல்லையா? இப்படி ஜெயித்து என்ன செய்ய போகிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 367

    0

    0