திமுக குடும்பத்திற்கு நெருக்கமான நிறுவனத்துடன் மின்சாரத்துறை ஒப்பந்தம் : தமிழகத்தில் மீண்டும் Power cut… ஜெனரேட்டர், UPS-ஐ ரெடியா வைங்க.. அண்ணாமலை வார்னிங்…!!

Author: Babu Lakshmanan
16 மார்ச் 2022, 4:36 மணி
Quick Share

தகுதியில்லாத நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளதால், தமிழகத்தில் மீண்டும் பவர் கட் வர வாய்ப்புள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக குடும்பத்திற்கு நெருக்கமான பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு, 4,442 கோடி ரூபாய்க்கு டான்ஜட்கோ ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

தரம் இல்லாத ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த நிதியாண்டு இந்த நிறுவனம் 350 கோடி ரூபாய் கடனில் இருந்ததாகவும், வங்கியில் வெறும் 35 கோடி மட்டுமே கையிருப்பு வைத்திருந்த நிறுவனத்திற்கு
இவ்வளவு பெரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சி முடிவதற்கு முன்னர் 35,000 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழக பாஜக செபி க்கு கடிதம் எழுதுவதோடு, சிஏஜி மற்றும் மத்திய அரசின் மற்ற துறைகளுக்கும் இது குறித்த தெரியப்படுத்தும் என தெரிவித்த அவர், இது குறித்து டான்ஜெட்கோ விளக்கம் அளிக்க வேண்டுமென்றார்.

கம்பெனி மூலம் கொள்ளை அடித்து, அதனை 2000 ஆக மாற்றி மக்களுக்கு வழங்குவது தான் Dravidian model என தெரிவித்த அவர், சினிமா, ரியல் எஸ்டேட்,பவர் ஜெனரேஷன் என எல்லா துறையிலும் இவர்களே ஆதிக்கம் செலுத்துவதாகவும், இது தான் உண்மையான் கார்ப்பரேட் அரசு மத்திய அரசையோ, பிரதமரையோ விமர்சிக்க இவர்களுக்கு தகுதி இல்லை என தெரிவித்தார்.

power cut 4 - updatenews360

பி.ஜி.ஆர் போன்ற நிறுவனங்களுக்கு டான்ஜட்கோ ஒப்பந்தம் வழங்கினால் முந்தைய திமுக ஆட்சி காலம் போல் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் பவர் கட் தொடங்கம் என தெரிவித்த அவர், இப்போதே பொதுமக்கள் ஜெனரேட்டர்,ups வாங்கி வைத்துக்கொள்வது சிறந்தது என தெரிவித்தார்.

தினசரி காலை விநாயகரிடம் தோப்பு கரணம் போடுவது போல், திமுக கூட்டணி கட்சிகள் முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறிய அண்ணாமலை, ஹிஜாப் விவாகரத்தை பொறுத்தவரை வகுப்புகளில் அணியக்கூடாது என உறுதிப்படுத்தப்பட்டுதே தவிர, பொதுவெளியில் அணிய எந்த தடையும் இல்லை எனவும், சிலர் வேண்டுமென்றே திரித்து கூறுவதாகவும் குற்றம்சாட்டினார்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 1481

    0

    0