சடலமாக மீட்கப்பட்ட திமுக மூத்த நிர்வாகி…போலீசார் விசாரணையில் பகீர் : கோவையில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2024, 9:28 am

சடலமாக மீட்கப்பட்ட திமுக மூத்த நிர்வாகி…போலீசார் விசாரணையில் பகீர் : கோவையில் பரபரப்பு!!

கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா கவுண்டர் என்ற பையா கிருஷ்ணன். இவர் கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். ஆனாலும் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செல்வாக்குடன் இருந்து வந்தார்.இதனால் இவருக்கு திமுக தனி மரியாதை கொடுத்து வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை பையா கவுண்டர் தனது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது தொகுதி மட்டுமல்லாது கோவையின் பல்வேறு பகுதி மக்களுக்கும் உதவிகளை செய்துவந்த பையா கவுண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!