அன்று அதானியை திட்டிய திமுக.. இன்று பாராட்டுக்களை குவிக்கிறது : சூசகமாக விமர்சித்த அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 4:31 pm

அன்று அதானியை திட்டிய திமுக.. இன்று பாராட்டுக்களை குவிக்கிறது : சூசகமாக விமர்சித்த அண்ணாமலை!!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தமிழகம் மீது ஏராளமான முதலீடுகள் குவிந்தது. குறிப்பாக அதானி குழுமம், டாடா குழுமம் என முன்னெப்போதும் இல்லாத அளவு 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகளை தமிழகம் பெற்றதுள்ளது.

இந்த மாநாடு குறித்து பேசிய பாஜகவின் அண்ணாமலை, திமுகவினர் இதற்கு முன்பு தேர்தலின் போது அதானி குழுமத்தை மிக தவறாக பேசியுள்ளனர். அதானி மோடியின் சொத்து, அதானிக்கும் பாஜகவும் சம்பந்தம் இருக்கிறது, பாகஜவுக்கு அதானிதான் நிதியளிக்கிறது விமர்சித்திருந்தனர்.

ஆனால், அதானியிடமிருந்து ரூ.42,768 கோடி அளவுக்கு முதலீடுகள் வந்த பிறகு திமுக தலைவர்களும், முதலமைச்சரும் பாராட்டியுள்ளார்கள். அம்பானி, டாடா குழும்பங்களின் முதலீடுகள், அவர்கள் தமிழகம் பற்றி பெருமையாக கூறியது போன்றவற்றை சுட்டிக்காட்டி திமுக தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆக அரசியலை விட்டுவிட்டு கட்சிகள் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பதை இந்த மாநாடு நமக்கு சொல்லுகிறது” என்று கூறியுள்ளார்.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?