கரூரில் திமுக குண்டர்கள் அட்டகாசம்… ‘இது 60 அல்ல’ : எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை!!!
Author: Udayachandran RadhaKrishnan26 May 2023, 2:10 pm
சென்னை, கரூர், கோவை, பெங்களூரு, ஹைதராபாத், கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட ஊர்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுகவினர் அங்கு திரண்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயனின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது.
இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதேபோல் சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க பரிந்துரைக்குமாறு வலியுறுத்தி மனு கொடுத்தார்.
வேலை வாய்ப்பு மோசடி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு ஆதரவாக ஐடி அதிகாரிகள் கும்பல், வாகனங்களை திமுக குண்டர்கள் சேதப்படுத்தினர்.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு ஆதரவாக ஐடி அதிகாரிகள் வாகனங்களை திமுக குண்டர்கள் சேதப்படுத்தினர்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு அவரது கட்சிக்காரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். 60களில் வாழவில்லை என்பதை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.