பெரம்பலூர் தொகுதியில் களமிறங்கும் திமுக…அமைச்சரின் மகனுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த அறிவாலயம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2023, 1:30 pm

பெரம்பலூர் தொகுதியில் களமிறங்கும் திமுக…அமைச்சரின் மகனுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த அறிவாலயம்!!!

திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு தற்போது முழு அரசியலில் குதிக்க போகிறார்.

அருண் நேருவை அரசியலுக்கு முழுமையாக இழுத்து வந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், அவரை எம்.பியாக்கி டெல்லிக்கு அனுப்பி வைக்க முயற்சித்து வருகின்றனர்.

திருச்சியை பொறுத்தவரை ஏற்கனவே அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என்.நேரு என மிகப் பெரிய இரண்டு பவர் செண்டர்கள் உள்ள நிலையில் அருண் நேருவையும் திருச்சியில் களமிறக்க திமுக தலைமை விரும்பவில்லை.

இதனால் தான் தனது சித்தப்பா மறைந்த ராமஜெயம் போட்டியிட விரும்பிய பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட அருண் நேருவும் ஆர்வம் காட்டி வருகிறார். தனது அப்பா நேருவை போலவே இப்போது கட்சியினர் இல்ல நிகழ்வுகளில் கலந்துகொள்வதோடு, திருச்சியில் இருந்தால் தினமும் அலுவலகம் சென்று பார்வையாளர்களையும் சந்திக்க ஆரம்பித்துள்ளார் அருண் நேரு.

முதலில் மகனை அரசியலுக்கு அழைத்து வர அமைச்சர் நேரு மிகவும் தயங்கினார். தன்னோடு அரசியல் போதும் என்று கூட நினைத்தார், ஏனெனில் அந்தளவுக்கு அவரது தம்பி ராமஜெயத்தின் மறைவு நேருவின் மனதை பாதித்திருந்தது.

ஆனால் ஆதரவாளர்கள் கொடுத்த அழுத்தத்தால் மகனின் அரசியல் வருகைக்கு நேரு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. பெரம்பலூர் தொகுதியை பொறுத்தவரை இதற்கு முன்னர் 2009-2014ல் அமைச்சர் நேருவின் அக்கா மகனும், நடிகருமான நெப்போலியன் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய இணை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 277

    0

    0