திமுக தொண்டனை செருப்பு தூக்க வைத்த டி.ஆர் பாலு… CM ஸ்டாலின் அட்வைஸ் செய்த மேடையிலேயே நடந்த சம்பவம்…!

Author: Babu Lakshmanan
10 October 2022, 4:15 pm

சென்னை : திமுக தொண்டனை செருப்பை எடுத்த வருமாறு திமுக பொருளாளர் டிஆர் பாலு கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மூத்த அமைச்சர் பொன்முடி, மகளிர் இலவச பேருந்து பயணத்தை ‘ஓசி’ என விமர்சித்தார். அதுமட்டுமின்றி கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், ‘பெண்ணொருவரை ஏய்… நீ உட்காரு,’ என ஒருமையில் பேசி அவமரியாதை செய்தார். இதைப் போல, அமைச்சர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகளும் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டது திமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Ponmudi_Updatenews360

இந்த நிலையில், திமுக பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதாவது, நிர்வாகிகள் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது, பொதுமக்கள் மத்தியில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார். மேலும், தினமும் காலையில் கண்விழிக்கும் போது, கட்சியினர் எந்த பிரச்சனையும் செய்து விடக் கூடாது என்று நினைத்துக் கொண்டுதான் விழிப்பதாகவும், பொதுமக்கள் மத்தியில் நடந்து கொள்ளும் கண்ணியமற்ற செயல்களால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது, கட்சி கூனி குறுகி நிற்பதாகவும் அவர் கூறினார்.

Mkstalin_UpdateNews360

முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு பேசிக் கொண்டே இருக்கும் போதே, திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, கட்சி தொண்டர் ஒருவரை தனது செருப்பை எடுத்து வரக்கூற, அத்தொண்டரும் அவரின் செருப்பை கையில் எடுத்து வந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

DMKTRBalu_UpdateNews360

பொதுக்குழு தொடக்கத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். முன்னதாக, காலில் இருந்த செருப்பை கட்சியினர் கழற்றிவிட்டு மரியாதை செய்தனர். அதன் பிறகு அனைவரும் செருப்பை அணிந்து கொண்ட நிலையில், பொருளாளர் டி. ஆர் பாலு மட்டும் செருப்பு அணிய மறந்து மேடையில் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

DMK_updateNews360

இதனை உணர்ந்த அவர், தனது தொண்டரிடம் செருப்பை எடுத்து வருமாறு கூற, அதனை கையில் எடுத்து வந்து அவரின் காலடியில் வைத்தார். இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 605

    0

    0