பிரபல பத்திரிக்கை மீது பொய் வழக்கு… சந்தர்ப்பவாத திமுக அரசு மன்னிப்பு கேட்டே ஆகனும்… விடாபிடியாக நிற்கும் அதிமுக…!!

Author: Babu Lakshmanan
26 May 2022, 3:53 pm

திமுக சந்தர்ப்பவாத அரசியல் செய்துவருவதாகவும், விகடன் மீது பொய் வழக்கு பதிவு செய்தற்கு அவர்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பு கூட்டணி கட்சிகள் முழுக்க முழுக்க சந்தர்ப்பவாத அரசியலை நடத்தி வருவதாகவும்,திமுகவின் கூட்டணி கட்சிகள் தேசிய அளவில் உள்ள நிலையில், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருஉருவ சிலையை வெங்கையா நாயுடுவை வைத்து திறப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியல்.

CM Stalin - Updatenews360

அக்கட்சியில் உள்ள திருச்சி சிவா, பாஜகவை ஓட ஓட விரட்டுவோம் என கூறுவது அநாகரீகத்தின் உச்ச கட்டம். மதம்சார்ந்த கூட்டணியாகவே திமுகவின் கூட்டணி உள்ளது. கலைஞரின் சிலையை திறக்க பாஜக முக்கிய தலைவரை அழைக்கும் திமுக, தனது எம்பிக்களை கொண்டு பாஜக அரசை அநாகரிகமாக பேசி இரட்டை நாடகம் நடத்தி வருகிறது. தமிழக அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகை மீது பொய் வழக்கு போட்டு திமுக அரசு அச்சுறுத்தி வருகின்றது.

பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் திமுகவின் ஜனநாயக விரோத செயலை அதிமுக தலைமை வன்மையாக கண்டித்துள்ள நிலையில், விகடன் பத்திரிகை நிறுவனத்தின் மீதும், ஆசிரியர் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும் ஜூனியர் விகடன் நிறுவனத்திடம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும், எனவும் வலியுறுத்தியுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1023

    0

    0