தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்கும் திமுக பெண் கவுன்சிலர் : வெளியான அதிர்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2024, 11:57 am

திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் விமலா. இவர் 41வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவருடைய கணவர் கருப்பட்டி சேவியர் திமுக பகுதி துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இப்பகுதியில் மளிகை கடை ஒன்றை விமலா நடத்தி வருகிறார் . அப்பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசு பதவியேற்றது முதல் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகமாகி வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

மேலும் படிக்க: பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழப்பு.. கார் விபத்தில் பலியான சோகம் : மேலும் இருவர் படுகாயம்!

இதைக்ப கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆளுங்கட்சி கவுன்சிலரே பகிரங்கமாக குட்கா விற்பனை செய்யும் வீடியோ அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

  • Vedhika Marriage News அவசர அவசரமாக நடந்த நடிகை ‘வேதிகா’ கல்யாணம்…அவரே வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!