திமுக பெண் கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பே இல்ல.. ஆபாசமா திட்றாங்க : கண்ணீர் மல்க பெண் நிர்வாகிகள் போர்க்கொடி..!!(வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2022, 10:43 pm

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள பெண் திமுக கவுன்சிலர்கள் பாதுகாப்பே இல்லை என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் சாதாரண கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு யூனியன் சேர்மேன் சௌமியா தலைமை தாங்கினார்.

அப்போது இந்த கூட்டத்தில், திமுக கவுன்சிலர் பிரேமா கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்தாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் பரிமளம் கருணாநிதி, பிரேமா மற்றும் அனிதா ஸ்டெல்லா ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே சௌமியா ஜெகதீசனின் அண்ணன் மகனான நிதிஷ் என்பவர் பரிமளத்தை காலால் மிதித்துள்ளார். இதையடுத்து கொந்தளித்த திமுக பெண் கவுன்சிலர்கள் கூட்டம் மன்றத்தை விட்டு வெளியே வந்து வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய கவுன்சிலர் பிரேமா, திமுக பெண் கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பே இல்ல, ஆபாசமா திட்றாங்க, தீர்மனத்தை கூட நிறைவேற்றி தரமாட்டிங்கறாங்க. மக்களுக்கு நல்லது செய்யவே விடமாட்டீங்கறாங்க.

பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத இந்த ராதாபுரம் யூனியன்ல என்ன நடக்குது தலைவர்தான் வந்து பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!