திட்டமிட்டபடி திமுகவின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்… CM வெளிநாட்டு பயணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது : அண்ணாமலை!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2023, 11:11 am

தமிழகத்தில் நடைபெறும் ஊழலை எதிர்த்து வரும் ஜூலை 9-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கவிருக்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அப்போது திமுக அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும். இதில் அமைச்சா்கள் உள்பட 21 போ் இடம்பெறுவாா்கள். மேலும், முந்தைய ஆட்சியாளா்கள் மீதான ஊழல் பட்டியல் எப்போது என்பது ஜூலையில் தெரிவிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை கமலாலயத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவின் ஊழல் பட்டியல் திட்டமிட்டபடி ஜூலை 9-ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தார்.

அரசு ஒதுக்கும் நிதியில் 25% ஊழலால் வீணாகிறது, அதை தடுப்பதே பாஜகவின் நோக்கம். முதலமைச்சர் வெளிநாட்டு பயணங்கள் அனைத்தும் சந்தேகத்துக்குரியதாக உள்ளன.

வெளிநாட்டு பயணங்களால் தமிழகத்திற்கு இதுவரை புதிய முதலீடுகள் கிடைக்கவில்லை என்றும் விமர்சனம் செய்துள்ளார். ஆடியோ விவகாரத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.

உறுதியான முடிவுகளை எடுக்க முடியாதபடி, பாதுகாப்பற்ற மனநிலையில் முதலமைச்சர் உள்ளார். திமுக அரசு அதிகாரிகளால் நடத்தப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 345

    0

    0