அம்பேத்கருக்கு திமுக செய்யும் துரோகம்.. வரலாற்றை மறைத்து பேசலாமா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக துணைத் தலைவர் கேள்வி!

அம்பேத்கருக்கு திமுக செய்யும் துரோகம்.. வரலாற்றை மறைத்து பேசலாமா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக துணைத் தலைவர் கேள்வி!

திமுக எம்பி அப்துல்லா பேசிய விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்த நிலையில், அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரிவினைவாத கருத்துக்களை பாராளுமன்றத்தில் பேசிய தன் கட்சியின் உறுப்பினருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார் முதலமைச்சர். நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது என்கிறார். ஜனநாயகத்தின் உயிர்நாடியான பாராளுமன்றத்தில் பிரிவினைவாதம் பேசி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயன்ற திமுகவின் முயற்சி நேற்று முறியடிக்கப்பட்டது என்பதை முதல்வர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இது நாள் வரை மொழி ரீதியாக, சாதி ரீதியாக, மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்த முயற்சித்து கொண்டிருந்தவர்கள், வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், பாஜகவின் ஆட்சியே தொடரும் என்ற நிலையை உணர்ந்து, பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த காஷ்மீர் அமைதி பாதைக்கு திரும்பியுள்ளதை ஏற்றுக்கொள்ளாமல், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் இன ரீதியிலான பிரிவினைவாதத்தை விதைக்க நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திராவிட நாடு கேட்டுக்கொண்டிருந்த காலம் மலையேறிப் போய் விட்டது என்பதை முதல்வர் உணரவேண்டும். இது மோடி தலைமையிலான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் பொலிவான புதிய இந்தியா என்பதையும், இங்கு பிரிவினைவாத போக்குக்கு இடமில்லை என்பதையும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

மண்டல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்திய போது ஈ.வெ.ரா தான் அதற்கு காரணம் என்று வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் அவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ஆனால், அந்த மண்டல் ஆணையத்தை அமைத்ததே எங்கள் வாஜ்பாய் அவர்களும், அத்வானி அவர்களும் அமைச்சர்களாக இருந்த ஜனதா கட்சி ஆட்சியில் தான் என்ற வரலாற்றை மறைத்து விட்டு முதல்வர் பேசுவது கண்டிக்கத்தக்கது.

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஐ அமல்படுத்தக்கூடாது என்று உறுதியாக நின்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்துக்கு எதிராக இன்று திமுக உறுப்பினர் பேசுவதும், முதலமைச்சர் ஆதரவளிப்பதும் அம்பேத்கருக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் அல்லவா?

ஈ.வெ.ரா வின் பெயரை எங்கும் – எப்போதும் – எந்த சூழலிலும் பயன்படுத்துவோம் என்று முழங்கியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஈ.வெ.ரா அவர்கள், திமுக குறித்தும், அண்ணாதுரை குறித்தும், கருணாநிதி குறித்தும், மகாத்மா காந்தி குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும் கூறிய அனைத்து கருத்துக்களையும் பயன்படுத்துவாரா முதல்வர்? முரசொலியிலும், தன் ‘X’ வலைதள பக்கத்திலும் ஈ.வெ.ரா வின் திமுக எதிர்ப்பு கருத்துக்களை வெளியிடுவாரா?

வளர்ச்சி பாதையில் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் புதிய இந்தியாவில் இனி பிரிவினைவாத சிந்தனைக்கு இடமில்லை என்பதை திமுக உணர வேண்டிய தருணமிது. அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்று சொன்னவர்கள், பாராளுமன்றத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் சிம்மக்குரலில் எழுந்த எதிர்ப்பை மறந்திருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன்.

பிரிவினைவாத கருத்துக்களை மட்டும் அல்ல சிந்தனையைக் கூட ஏற்காது இந்தியா என்பதை முதல்வர் உணர்ந்து கொண்டு, திமுக உறுப்பினரின் பிரிவினைவாத பேச்சை கண்டிக்காமல், ஈ.வெ.ரா பெயரை நீக்கிவிட்டார்கள் என்று மடைமாற்றி, பிரச்சினையை திசை திருப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.”

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டிற்குள் வளர்க்கப்படும் செடிகள்… பொதுமக்கள் வரவேற்பு : ரூட் ரிதாம்ஸ் நிர்வாகிகள் பெருமிதம்!

கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…

10 minutes ago

பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?

இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…

1 hour ago

மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?

வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…

2 hours ago

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் திடீர் கைது… கண்ணீர் விட்டு அழுத காட்சி!

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…

2 hours ago

காதலை ஏற்க மறுத்த இளம்பெண் காரில் கடத்தல்.. கட்டாய திருமணம் செய்ய முயற்சி..இறுதியில் டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…

3 hours ago

டிரம்ப் கணக்கு தவிடுபொடி.. பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவு : பல லட்சம் கோடி இழப்பு!

பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…

4 hours ago

This website uses cookies.