பச்சோந்திதனமாக செயல்படுவதில் திமுகவினர் கில்லாடிகள்…முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2023, 4:28 pm

பச்சோந்திதனமாக செயல்படுவதில் திமுகவினர் கில்லாடிகள்… ஆளுநர் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!

தருமபுரி மாவட்டம் அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் மகள் திருமணத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது கூறியதாவது, திமுக என்பது முரண்பாடு உடைய ஒட்டு மொத்த உருவம். திமுகவிற்கு ஜால்ரா தட்டுகின்ற எல்லாவற்றுக்கும் தலையாட்டுகின்ற ஆளுநர் இருந்தால் நாட்டுக்கு தேவை என்பார்கள் .

சட்டமன்றத்தில் ஆளுநர் தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். 17 ஆண்டு மத்திய அரசில் ஆட்சியில் இருந்தீர்கள்.

சர்க்காரியா ஒரு கமிஷனை நியமனம் செய்து மாநிலங்களில் இருந்து கருத்து கேட்டு ஆளுநருக்கு என்னென்ன அதிகாரம் வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தினார். அமல்படுத்தியிருந்தாலே போதும் பிரச்சனை வந்திருக்காது.
17ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து விட்டு அப்பொழுது அமல்படுத்தியிருந்தால் பிரச்சனை இல்லை. ஆளுநருக்கு அரசுக்கும் மோதல் போக்கு உருவாகி இருக்காது.

ஆளுநர் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும் என்பதுதான் விதி
அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. திமுக தேவைக்கு ஏற்றார் போல் எதிர்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடு ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடு. பச்சோந்தி தனமான முறைகளை கையாள்வதில் கில்லாடிகள் ஆளும் திமுக அரசு.

சட்டமன்றத்தில் பூனை குட்டி வெளியே வந்து விட்டது என்று துரைமுருகன் பேசினாரே என்ற கேள்விக்கு. திமுக 17 ஆண்டுகள் மத்தியில் இருந்தது அப்பொழுது பூனை குட்டிகள் எல்லாம் என்ன செய்தது. பூனை குட்டிகள் எதுவும் செய்யவில்லை.

அதிகாரத்தில் இருக்கும் பொழுது மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்காமல் மாநில உரிமைக்கு குரல் கொடுக்காமல் தனது குடும்ப நலன்களுக்காக உரிமையை விற்றவர்கள் பேசலாமா? 

இவர்களைப் போல நாங்கள் இரட்டை வேஷம் போடுவது இல்லை
தனித் தன்மையுடன் தான் இருக்கிறோம் என்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 350

    0

    0