எதுக்கு இந்த கண்துடைப்பு..? கேமரா முன் மட்டுமே திமுகவின் சமூக நீதி : வீடியோ பதிவிட்டு ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2022, 9:38 pm

திமுகவின் சமூக நீதி கேமராமுன் மட்டுமே என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வீடியோவுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் திமுக எம்பி கதிர் ஆனந்த் அவர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பேரூராட்சி தலைவரை மேடைமேல் அமர்த்தாமல் அவமதித்துள்ளனர்.

இதனால் செய்தியாளர்களுக்கு முன்பு முற்றிய வாக்குவாதங்களால் கண்துடைப்பு நடவடிக்கையாகப் பேரூராட்சி தலைவரை மேடையில் ஏற்றினார்கள்.

கேமராக்களுக்கு முன்பு மட்டுமே திமுகவின் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!