அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ‘பவர் கட்’ பண்ணக்கூடாது : அதிகாரிகளுக்கு மின்வாரியம் போட்ட உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2023, 11:58 am

அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நிகழ்ச்சி முடியும் வரை உதவி பொறியாளர் நிலைக்கு குறையாத அதிகாரி மின்விநியோகத்தை கண்காணிக்க மின்வாரியம் ஆணையிட்டுள்ளது.

அவசரகாலத்தை தவிர அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சி நடக்கும் நாளன்று பராமரிப்பு தடைக்கூடாது என்றும் உத்தரவிட்ப்பட்டுள்ளது.

துணைமின் நிலையங்களில் போதிய பணியாளர்கள் இருப்பதை செயற்பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவசர கால மின் தடையை சரிசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்றும் இதில் சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கவும் மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

  • Aamir Khan salary model 20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!