மற்ற மதங்கள் பற்றி பேச முதுகெலும்பு இருக்கா? மற்ற மதங்களில் குறையே இல்லையா? உதயநிதியை விளாசிய நிர்மலா சீதாராமன்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2023, 6:07 pm

மற்ற மதங்கள் பற்றி பேச முதுகெலும்பு இருக்கா? மற்ற மதங்களில் குறையே இல்லையா? உதயநிதியை விளாசிய நிர்மலா சீதாராமன்!!

சென்னையில் தணிக்கையாளர் சங்கத்தின் 90-வடு ஆண்டு விழா கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். பட்டய கணக்கர், தணிக்கையாளர்கள் தங்கள் பணியை திறமையாக செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அனைத்து மாநிலங்களுக்கும் தேவையானவற்றை மத்திய அரசு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,” பொது மேடையில் ஒரு மதத்தை ஒழிக்க போகிறோம் என்று பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பற்றி செய்தியாளர்கள் கேட்க கேள்விக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் மட்டுமே என தெரிவித்தார்.

சனாதனம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்.” இந்த 2 நிமிடங்களில் சனாதனம் குறித்து பேச சொல்கிறீர்கள். ஆனால், அரசியல் சாசனத்தின்படி உறுதிமொழி ஏற்று ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளவர், சனாதனம் குறித்து பொதுவெளியில் இப்படி பேசுவது சரியானது அல்ல.

எந்த ஒரு மக்களுக்கும், யாருக்கும் விரோதம் வரும் அளவுக்கு பேசக் கூடாது என்று தெளிவாக உறுதிமொழி ஏற்கிறோம். அமைச்சராக இருப்பவரின் பொறுப்பு அது. அப்படியிருக்கையில், என்னதான் கொள்கை என்றாலும், அரசியல் சாசனப்படி, அமைச்சராக உறுதிமொழி ஏற்ற பின்பு, ஏதோ ஒரு மதத்தை ஒழிக்கப் போகிறேன் என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

முக்கியமாக ஓர் அமைச்சருக்கு இப்படி சொல்லும் அதிகாரம் இல்லை. இது ரொம்ப தப்பு. ஊடகங்களிடம் சாட்சி இருக்கு. ஆனால், இப்போது ஒழிக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்று அமைச்சர் பேசுவது சரியானாதா? நாம் அனைவரும் பொறுப்பா பேசனும்.

தமிழ்நாட்டை பற்றி நாம் யோசிக்கனும். உணர்ச்சிவசப்பட்டு பேசாமல், யோசிச்சி பேசனும். அதே மேடையில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் இருக்கிறார். நீங்களும் அதே மேடையில் இருந்துகொண்டு ஒழிக்க வேண்டும் என்று சொல்வதை கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள். இதன்மூலம் எதை காப்பாற்றுகிறீர்கள்? லட்டு மாதிரி. இந்து பக்தர்கள், சனாதன பக்தர்கள் உண்டியலில் போட்றாங்க பணத்தை. அது வேண்டுமானத இருக்கே. அதிலிருந்து வரும் பணம் நல்லாயிருக்கிறதா? அதுக்கு ரியாக்சன் இருக்க கூடாது என எதிர்பார்ப்பது தவறு. “ என்று கூறினார்.

மேலும், அவதார புருஷன் ராமரின் கழுத்தில் செருப்பு அணிவித்து ஊர்வலம் நடத்திய தமிழ்நாட்டில் எந்த பதிலடியும் கிடைக்கவில்லை. வன்முறை கூடாது என்றுதான் சொல்றேன். வன்முறைக்கு பதில் வன்முறை இல்லை. வாக்குமூலமாக இருந்தாலும், செயலாக இருந்தாலும் வன்முறைக்கு பதில் வன்முறை இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று அவர் பதிலளித்தார்.

”நீங்க எவ்ளோ இகழ்ச்சி பண்ணாலும் என்ன முயற்சி எடுத்தாலும் அவங்க வேலையைப் பார்த்து கொண்டிருப்பார்கள். அதுதான் சனாதன தர்மம். அவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை. அதனால்தான் இது மாதிரியான தூண்டுதல் பேச்சுகள் நடக்குது. வேற எந்த ஒரு மதத்தையும் எடுத்து சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாதவர்கள் இவங்க. இதர மதங்களில் குறைகளே இல்லையா? அதை பற்றி பேச தைரியம் இருக்கா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட கருத்தால் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!