2 மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்த தமிழிசையின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? சொந்தமாக கார் கூட இல்லை.!!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2024, 11:02 am
2 மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்த தமிழிசையின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? சொந்தமாக கார் கூட இல்லை.!!
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன், பதவியை ராஜினமா செய்துவிட்டு தேர்தலில் களமிறங்குகிறார்.
பாஜக சார்பில் தென் சென்னையில் அவர் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அந்த வகையில் தமிழிசை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழிசையின் சொத்து பட்டியலையும் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து பட்டியலையும் இணைத்துள்ளார். அதில், தமிழிசை பெயரில் அசையும் சொத்து 1.57 கோடி எனவும், சொந்த வாகனம் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தலா 10 லட்சம் மதிப்புள்ள பரிசோதனை இயந்திரம் மற்றும் ஸ்கேன் இயந்திரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழிசை சௌந்தர்ராஜன் கணவர் பெயரில் மொத்தம் 3.92 கோடி அசையும் சொத்து உள்ளதாகவும், மகள் பெயரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து உள்ளதாகவும் 4 கார்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் பெயரில் 60 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும், அவரது கணவர் சௌந்தரராஜன் பெயரில் 13.70 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், மகள் பெயரில் 70 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழிசை பெயரில் 58 லட்சமும், அவரது கணவர் பெயரில் 3.35 கோடியும், மகள் பெயரில் 3.41 கோடியும் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.