நீங்கள் செல்வச்செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? சிலரை பணக்காரர்களாக்க மின்துறை ஊழலில் சிக்கியுள்ளது : அண்ணாமலை!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2022, 10:21 pm

நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? என மின் கட்டண உயர்வுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின்‌ கட்டணத்தை திருத்தி அமைப்பது குறித்து மின்துறை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறி, மாற்றப்பட்டுள்ள புதிய கட்டண விபரங்களை தெரிவித்தார்.

வருவாய் மற்றும் கடன் சுமைகளை சுட்டிக் காட்டிய அமைச்சர், 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்த்து வேறு வழியில்லை என்று குறிப்பிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டண விபரங்களை தெரிவித்தார்.

இந்தநிலையில் மின் கட்டண உயர்வுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில், பல சாக்குப்போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின் துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை இன்று உயர்த்தி உள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் சிலரை பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. நீங்கள் செல்வச்செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி