என்னிடமே அரசியல் வேலையை காமிக்கிறீங்களா? அதெல்லா நடக்கவே நடக்காது : திருமாவளவன் கொடுத்த தரமான ரிப்ளை!!!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு திருமாவளவன் மாறுகிறார் என சிலர் கிளப்பிவிட்டுள்ளதை அறிந்து கொதித்துப் போன அவர், யார் ஆதரித்தாலும், யார் ஆதரிக்காவிட்டாலும், வெற்றி வாய்ப்பை பெற்றாலும் சரி -இழந்தாலும் சரி சிதம்பரம் தொகுதியில் தான் நிற்பேன் என மிகத் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
தாம் சிதம்பரம் தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாறவுள்ளதாக கடலூர் மாவட்ட லோக்கல் திமுக நிர்வாகிகள் சிலர் தான் கிளப்பி விட்டிருப்பார்கள் என்று யூகித்த திருமாவளவன் சூசகமாக இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் ஒரு முறை இரு முறை அல்ல 7 முறை போட்டியிட்டிருக்கிறேன் என்றும் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறேன் எனவும் தொகுதியை அந்தளவுக்கு தாம் நேசிக்கிறேன் எனவும் செண்டிமெண்டாக பேசியிருக்கிறார் திருமாவளவன்.
தாம் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ள திருமாவளவன், யாரோ தனக்கு வேண்டாத சிலர் தான் தாம் தொகுதி மாறவுள்ளதாக வதந்தியை பரப்புகிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி தனது சொந்தத் தொகுதி என்றும் இந்த தொகுதிக்கு எதிராக தாம் ஒரு போதும் செயல்பட்டதே இல்லை எனவும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் மக்களோடு இருக்கும் அரசியல் தலைவர் தாம் என்றும் தமிழகம் மட்டுமின்றி தென் இந்தியா முழுவதும் சுற்றி வந்துக் கொண்டிருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் திருமாவளவன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
அதேபோல் விழுப்புரம் மக்களவைத் தொகுதியிலும் கடந்த முறையை போல் இம்முறையும் விசிகவே போட்டியிடுமா அல்லது திமுக நேரடியாக களமிறங்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.