சீமானோட அப்பா பெயர் வைக்கணுமா? கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பெயர் விவகாரம்.. திமுக எம்பி தயாநிதி மாறன் பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2024, 10:01 pm

சீமானோட அப்பா பெயர் வைக்கணுமா? கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பெயர் விவகாரம்.. திமுக எம்பி தயாநிதி மாறன் பதிலடி!

சென்னையில் செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: திமுக அரசு தொலைநோக்கானதா? சென்னையில் தலைநகரில் பெருமாநகரில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறதா? இருந்தது ஒன்று. அதையும் மூடிவிட்டீங்க இல்லையா? சென்னை பெருமாநகரில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறதா? ரூ110 கோடி செலவழிச்சு கட்டுனீங்கதானே.. இப்ப அதை என்ன செய்ய போறீங்க? வணிக வளாகம்.. லூலூவுக்குதானே.. லூலூ மாலுக்கு கொடுக்கத்தானே இந்த வேலையை செய்றீங்க?

40 கிமீ தொலைவில் பேருந்து நிலையமா? கிளாம்பாக்கத்தில் இறங்கி எப்படி இங்க வருவது? கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டுனீங்க..இப்ப மதில் சுவரை இடிக்கிறீங்க.. யாரு கேட்டது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்? அதுல 70% அதிமுக செய்துவிட்டது.. நீங்க ரூ18 கோடியோ, ரூ20 கோடியோ போட்டு முடிச்சுவிட்டு விட்டு உதயசூரியன் சின்னம் எதுக்கு அதுல? தம்பி உதயநிதி கேட்கிறாரே, உங்க அப்பன் வீட்டு காசான்னு? நான் கேட்கிறேன்.. இது என்ன உங்க அப்பன் வீட்டு காசா? உங்க தாத்தா வீட்டு காசா? எதுக்கு உங்க தாத்தா பேரை வைக்கிற?

இந்த நாட்டுல கருணாநிதியை விட்டா தலைவனே இல்லையா? எங்களுக்கு யாருமே இல்லையா? எழுதுனா அவருதான் எழுதினார்.. அதுக்கு ஒரு பேனா வைக்கனும்.. மருத்துவமனையா? அவரு பெயரு.. ஏன் முத்துலட்சுமி ரெட்டி பெயரை வைக்க முடியாதா? முதன் முதலில் மருத்துவம் படித்த பெண் பெயரை வைக்க கூடாதா? நூலகத்துக்கு தாத்தா பாண்டிதுரைத் தேவர் பெயரை வைக்கக் கூடாதா? 4-வது தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தவர் பாண்டித்துரை தேவர்.. அவர் பெயர் வைக்கக் கூடாதா? என சரமாரி விமர்சித்தார்.

இந்த நிலையில் சீமான் எதிர்ப்பு குறித்து பதிலளித்த திமுக எம்பி தயாநிதி மாறன், ”ஏன் அவங்க அப்பா பெயரை வைக்கணுமா?’ கருணாநிதி என்பவர் யார் என்பதை சீமான் முதலில் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு இன்று இந்தளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணமே கருணாநிதி தான் என்றும் பின் தங்கியவர்களும் படித்து பதவியில் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் எனவும் கூறினார். தமிழ்நாட்டில் சமத்துவத்தை உருவாக்கியவர் கருணாநிதி என்றும் அவர் பெயரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை சூட்டுவது என வினவினார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!