கட்சிக்காக உழைத்தவர்களை வேவு பார்ப்பதா? அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த அடுத்த நிர்வாகி!

நேற்று தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த விவகாரம் அக்கட்சியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் பாஜகவிலிருந்து தற்போது விலகுவதாக அறிவித்து உள்ளார். தமிழ்நாடு பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன். அண்ணாமலையை விமர்சித்து பேஸ்புக்கில் நீண்ட பதிவை வெளியிட்டு அவர் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் முகநூலில் பதிவிட்டு உள்ளதாவது,”கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? இறைவனுக்கே வெளிச்சம்.

ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார். தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார்.

தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன் அவரை முதலில் காலி செய்தார்.

(அவர் மீது இதுவரை எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை) அடுத்து பேராசிரியர் சீனிவாசன். மொத்தம் நான்கு பொதுசெயலாளர்கள். அவர்களில் மூவருக்கு பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுத்துவிட்டு தன்னைவிட அறிவாளியான பேராசியர் சீனிவாசனுக்கு மட்டும் பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுக்கவில்லை.

அடுத்து பொன்.பாலகணபதி, மாநில பொதுச்செயலாளர். அவருக்கு சின்ன பிரச்சினை வருது. அக்கா சசிகலா புஷ்பா நான் மீடியாவில் அவர் மீது தவறு இல்லை என்று பேட்டி கொடுக்கிறேன் என்ற போது அந்தக்காவை தடுத்து பொன்.பாலகனபதியை அசிங்கப்படுத்தினார். அடுத்து நைனார் அண்ணன் அவரை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாக கூட மதித்தது இல்லை.

மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை தனது அறையில் உள்ளே வைத்துக்கொண்டு **** என்று போலீஸ் தோரணையில் ஏளானமாக பேசுவது. இவர் வந்து தான் எல்லாம் கிழிச்ச மாதிரி எல்லாம் கம்பு சுத்துறானுங்க இவர் இடத்தில் ஒரு பொம்மை வந்திருந்தாலும் பாஜக தொண்டன் தூக்கி கொண்டாடிருப்பான்.

பாஜக தொண்டனை கைது செய்துவிட்டார்கள்னு செய்தி அனுப்பினால் அவன் ஏன் இப்படி பதிவு போட்டான்னு திருப்பி கேள்வி கேட்கிறது. அவனுக்கு எந்த சட்ட உதவியும் செய்கிறது இல்ல. சட்ட உதவி செய்கிறவனை ஏன் செய்கிறனேனு மிரட்டல் விடுறது. இந்த சங்கிகளுக்கு ஒரு பழக்கம் இருக்கு. எவனையாது தூத்தனும்ணா மொத்தமா தூத்துறது.

அவன் என்ன பண்ணிட்டு வந்திருக்கான்? அவன் உழைப்பு என்ன? இப்பேர்பட்டவன் எப்படி திடீர்னு பேசுறான். இவனே இப்படி பேசுறான்ன இவன் என்ன செய்தார்கள் என்று ரெண்டு பக்கமும் யோசிக்க மாட்டானுங்க.

பாஜக தலைவராக அண்ணன் முருகன் இருக்கும் போது மாற்று கட்சியில் இருந்து மிக முக்கிய தலைவர்களை எல்லாம் கொண்டு வந்து கட்சியில் இணைத்தார்.

அண்ணாமலை வந்து அப்படி யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா?? சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பாப்பது, ஊர் உலகமே கேவலமாக பேசும் ரொட்டியை கூடவே வச்சு சுற்றுவதுதான் இந்த புனிதரின் வேலை போல. நான் சொன்னது உண்மையா பொய்யா என்பது கட்சியின் உள்ளே இருக்கும் 90% நிர்வாகிகளுக்கு தெரியும், வெளியில் உள்ள சோசியல் மீடியா நண்பகளுக்கு அவர் புனிதராக தான் தெரிவார்.

இன்னும் இந்த வார் ரூம் கோஸ்டிகள் என்னைப்போல எத்தனை பேரை வெளியே அனுப்ப போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். இந்த சங்கிகளுக்கு ஒன்னு சொல்லிக்க விரும்புகிறேன். எப்படியும் என்ன திட்டுவிங்க. அதுக்கு முன்னாடி ஒரு தீவிர வெறிபிடிச்ச சங்கியே இப்படி போறானே இவனுங்க எந்தளவுக்கு கேவலமா இருக்கானுங்கனு கொஞ்சமாது யோசிச்சி பாருங்க.

இதுவரை இந்த கட்சிக்கு என்னால் முடிந்த அளவிற்க்கு 100% உழைத்திருக்கேன். என்னை எப்படியும் திட்டி தீர்பீர்கள் அதற்கு முன்னால் ஒரு சித்தாந்த வாதியே இப்படி போறானே தவறு எங்கே நடக்குதுனு ஒரு முறை யோசிச்சிட்டு திட்டுங்க. இத்தனை காலம் என்னோடு பயணித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

4 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

5 hours ago

நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…

6 hours ago

ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!

சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…

7 hours ago

‘குட் பேட் அக்லி’ யுனிவர்ஸ் படமா…அதை நீங்க கவனிச்சீங்களா மாமே.!

குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…

7 hours ago

உங்களை நம்பி தான் இருக்கேன்..தியேட்டர் ஓனர்களுக்கு ‘சப்தம்’ பட இயக்குனர் வைத்த கோரிக்கை.!

கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…

8 hours ago

This website uses cookies.