மக்களிடம் செருப்படி வாங்கிட்டு தேர்தலில் போட்டியிடும் திமுகவுக்கு மானம், வெட்கம் இல்லையா? உதயநிதிக்கு பாஜக பதிலடி!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2023, 8:52 am

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும் ஆளுநரையும் கண்டித்து மதுரை தவிர தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வந்தது. சென்னையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

உண்ணாவிரதத்தில் நிறைவுரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ஆளுநரை கடுமையாக சாடினார். ஆளுநரின் பெயர் ஆர்.என்.ரவி கிடையாது ஆர்.எஸ்.எஸ்.ரவி. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் வேண்டுமானலும் நில்லுங்கள். உங்கள் சித்தாந்தங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லுங்கள் அவர்கள் செருப்பை கழற்றி அடிப்பார்கள் என கூறினார்.

அவரது இந்த பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “செருப்பை கழட்டி அடிப்பாங்க” என்று தமிழக முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல அநாகரீகமான அரசியலும் கூட. செருப்பால அடிப்பாங்க என்ற சொல் வன்மத்திற்குரியது, சட்டத்திற்கு புறம்பானது என்று பேசுபவருக்கு தான் திமிர் மற்றும் கொழுப்பு?

ஜெயிக்கவில்லையென்றால் மக்கள் ‘செருப்பால் அடிப்பார்கள்’ என்று அர்த்தம் என்றால், திமுக எண்ணற்ற கணக்கான தேர்தல்களில் தோல்வியுற்றது உலகத்திற்கே தெரியும். 1980, 1984,1991 தேர்தல்களில் தோற்ற திமுகவை தமிழக மக்கள் செருப்பால் அடித்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் தந்தை கூட தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றிருக்கிறார். ஆனால், நீங்கள் கேட்ட கேள்வியை இங்கே கேட்டு உங்கள் அளவிற்கு நான் தரம் தாழ்ந்து பேச மாட்டேன்.

2001, 2011,2016 தேர்தல்களில் படு தோல்வியடைந்தீர்களே? மக்கள் திமுகவை செருப்பால் அடித்தார்களா என்று பொருள் கொள்ள வேண்டுமா? 2014ம் ஆண்டு மக்களைவை தேர்தலில் மக்கள் திமுகவை செருப்பால் அடித்து புறமுதுகிட்டு ஓடச்செய்தார்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

மக்களின் இவ்வளவு செருப்படியையும் பெற்று கொண்டு தொடர்ந்து திமுக தேர்தல்களில் போட்டியிடுவது கேவலமில்லையா? வெட்கக்கேடு இல்லையா? மானக்கேடு இல்லையா?

ஒரு மாநிலத்தின் அமைச்சர், அதிலும் முதலமைச்சரின் மகன் குடியரத்தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை தரம் தாழ்ந்து தரம் கெட்டு ‘செருப்பால் அடிப்பாங்க’ என்று பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதோடு, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முதிர்ச்சியற்ற , அராஜகமான, அநாகரீகமான, மக்களை தூண்டி விடும் முறையில் பேசியுள்ள உதயநீதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படி தரக்குறைவாக பேசிய அமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டிப்பதோடு, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்? 
  • Close menu