கூடங்குளத்தில் போராடியவர்கள் தேசத்துரோகிகள் என திமுக சொல்கிறதா? CM ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2023, 10:00 pm

ஆளுநர் கூடன்குளம் குறித்து அவர் பேசியதை மறைத்துவிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், நேற்று தமிழக ஆளுநர் அவர்கள் பேசுகையில் கூடன்குளம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட நிதி மக்களை தூண்ட பயன்பட்டது என்று பேசியதற்காக திமுக வினரும், காங்கிரஸ் கட்சியினரும் குய்யோ முறையோ என்று கதறி கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் ஆளுநர் ஸ்டெர்லைட் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டார் என்று குறிப்பிடுகிறார்களேயன்றி கூடன்குளம் குறித்து அவர் பேசியதை மறைத்துவிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் பேசியது தவறு என்று கண்டிக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினும், மக்களவை உறுப்பினர் கனிமொழியும் திடீர் தமிழ் பாசம் வந்து துடிக்கின்றனர்.

தமிழக காங்கிரஸ் பிப்ரவரி 24, 2012 அன்று அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கூடன்குளத்தில் போராட்டம் செய்பவர்களை அமெரிக்க என்ஜிஓக்கள் நிதி அளித்து தூண்டி விடுகிறார்கள் என்று கூறியதை மறந்து விட்டு இன்று நீலிக்கண்ணீர் வடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அதே போல் திமுக தலைவர் கருணாநிதியும், பிப்ரவரி, 29, 2012 அன்று கூடன்குளம் போராட்டத்திற்கு அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் தான் காரணம் என்று கூறியதையும், அதிமுக அரசு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறியதையும் மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா? அப்படியென்றால், கூடங்குளத்தில் போராடியவர்கள் தேசத்துரோகிகள் என்று சொல்கிறதா திமுக?

அமெரிக்க நிதியினால் தூண்டப்பட்டதால் தான் போராட்டம் நடைபெற்றது என்று ஏற்றுக்கொள்கிறாரா மு.க.ஸ்டாலின் அவர்கள்? எதிர்க்கட்சியாக இருந்தால் போராட்டக்காரர்கள் தேச பக்தர்கள் என்றும் ஆளும்கட்சியாக இருந்தால் போராட்டக்காரர்கள் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்துவது மலிவான அரசியல் மட்டுமல்ல ஆபத்தான அரசியலும் கூட.

மன்மோகன் சிங் கூறினால் சரி, ஆர்.என்.ரவி கூறினால் தவறா? எந்த ஆதாரத்தை கொண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் கூடன்குளம் போராட்டத்தை தூண்ட வெளிநாட்டு நிதி தான் பயன்பட்டது என்று கூறினார் என்பதை அன்று மத்திய அமைச்சரவையில் இருந்த திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…