மொத்தமும் மாறுதா? திமுக அரசுக்கு திடீர் பாராட்டு : ட்விஸ்ட் வைத்த தேமுதிக.. குழப்பத்தில் அரசியல் கட்சிகள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 7:30 pm

மொத்தமும் மாறுதா? திமுக அரசுக்கு திடீர் பாராட்டு : ட்விஸ்ட் வைத்த தேமுதிக.. குழப்பத்தில் அரசியல் கட்சிகள்!!!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமம், ‘எஸ்’ வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், நேற்று முன்திம் நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை – கொல்லம் ரெயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

அப்போது அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதி செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரெயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரெயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, ரெயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் ரெயில் விபத்தை தடுத்துள்ளனர்.

உடனடியாகத் தகவலறிந்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர்.

மேலும் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரெயிலும் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரெயிலை நிறுத்திய சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். மேலும் தம்பதிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

வயதான தம்பதிக்கு தமிழக அரசு பாராட்டி ரூ.5 லட்சம் வெகுமதி அளித்துள்ளதற்கு தேமுதிக வரவேற்பு அளித்துள்ளது.5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்க என்ற தேமுதிகவின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதற்கு எங்களுடைய பாராட்டுக்களை தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் தேமுதிக சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.”திமுகவை பிரேமலதா பாராட்டி பதிவு வெளியிட்டிருப்பதன் மூலம் இனி அடுத்தடுத்த நகர்வுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி